September matha rasi palan / செப்டம்பர் மாத ராசி பலன்கள் 2020: யாருக்கு பணம் வீடு தேடி வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செப்டம்பர் மாதம் சூரியன் சிம்மம் ராசியில் பாதி நாட்களும் கன்னி ராசியில் 15 தினமும் சஞ்சரிப்பார். சூரியனுடன் புதன் கூட்டணி இந்த மாதமும் நீடிக்கிறது. இதனால் புத ஆதிபத்ய யோகமும் உண்டாகிறது. சுக்கிரன் செவ்வாய் பார்வை கிடைக்கிறது. ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் கூட்டணிகளால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய நான்கு ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

செப்டம்பர் மாதம் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் மேஷ ராசியில் உள்ள செவ்வாய் வக்ரமடைகிறார். தனுசு ராசியில் உள்ள குரு பகவான் வக்ரம் முடிகிறது. 16ஆம் தேதியன்று சூரியன் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

கன்னி ராசியில் உச்சம் பெற்றிருக்கும் புதன் செப்டம்பர் 22ஆம் தேதி துலாம் ராசிக்கு இடம்பெயர்கிறார். செப்டம்பர் 23ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது. ராகு ரிஷபம் ராசிக்கும் கேது விருச்சிகம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் வாழ்வின் துன்பத்தை தொலைத்து விட்டேன் என்று இந்த நான்கு ராசிக்காரர்களும் பாடப்போகிறீர்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்மம் ராசிக்கு அதிபதி சூரியன் செப்டம்பர் மாதத்தில் பாதி நாட்கள் உங்க ராசியில் பயணம் செய்கிறார். புதன் இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். சுக போகமான மாதம் காரணம் சுக்கிரன் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நல்லா வாழ்க்கையை அனுபவிப்பீங்க. பயணங்கள் இனி சந்தோஷமாக அமையும். தடைபட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும். உச்சம் பெற்ற புதனால் வார்த்தை பலிதமாகும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். திட்டமிட்டு காய்நகர்த்துவீர்கள். வீட்டில் நல்ல காரியம் நடக்கும். சிலருக்கு சுப விரைய செலவுகள் ஏற்படும். குருபார்வையால் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும். வரன் பார்க்கத் தொடங்குவீர்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் முடியும். ஆட்சி பெற்ற செவ்வாய் பாக்கியங்களை தருவார். உதவிகள் தேடி வரும். ராகுவின் இடப்பெயர்ச்சியினால் வேலையில் இடமாற்றம், புதிய தொழில் தொடங்குவதில் நன்மை ஏற்படும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். மாணவர்களுக்கு இது நல்ல மாதம். படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்கு உங்க ராசி நாதன் புதன் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். திட்டமிட்டு செய்யும் காரியங்களால் நன்மைகள் நடைபெறும். ராகு ஒன்பதாம் வீட்டிற்கும் கேது மூன்றாம் வீட்டிற்கும் இந்த மாதம் இடப்பெயர்ச்சி அடைவதால் தடைகள் நீங்கும். உங்கள் முடிவுகள் தெளிவாக இருக்கும். சுக்கிரன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். நிதி நெருக்கடிகள் நீங்கும், ராகு கேதுவினால் ஏற்பட்டிருந்த தடங்கல்கள் நீங்கும். புதன் உங்க ராசிக்குள் வந்து அமர்ந்து ஆட்சி உச்சம் பெருகிறார். புதிய தொழில் வியாபாரம் பற்றிய முடிவு எடுப்பீர்கள். தனாதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் அமர்கிறார். உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் செவ்வாய் இருக்கிறார். எதையும் உணர்ச்சி பூர்வமாக முடிவு எடுக்க வேண்டாம். சகோதர சகோதரிகளிடம் சண்டை வேண்டாம். இந்த மாத பிற்பகுதியில் செவ்வாய் வக்ரமடையும் போது பிரச்சினைகள் நீங்கும். எதிர்கால திட்டமிடல்கள் வெற்றிகரமாக இருக்கும். வீண்வாக்குவாதங்களை தவிருங்கள். வாக்கு கொடுக்க வேண்டாம். ராகுகேது பெயர்ச்சியால் பிரச்சினைகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் வரும். பொருளாதார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். திருமணம் தொடர்பான சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.

துலாம்

துலாம்

ராசி நாதன் சுக்கிரன் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். சூரியன் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் லாபத்தை கொடுப்பார். சனி வக்ர நிவர்த்தி அடைவதால் மன உளைச்சல்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சுகத்தை கொடுக்கும். பத்தில் சுக்கிரன் பதவி சுகத்தை தருவார். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதிய வேலைகள் தொடர்பாக நல்ல செய்தி தேடி வரும்.
புதன் 12ஆம் வீட்டில் மறைந்து உச்சமடைகிறார். உங்களின் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். புதிய வித்தைகளை கலைகளை கற்றுக்கொள்வீர்கள். செவ்வாய் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்க ராசியை பார்க்கிறார். களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தையில் சின்னச் சின்ன தடைகள் வரலாம். பணவரவு வரும். கொடுத்த கடன்கள் வசூலாகும். கேது 2ஆம் வீட்டில் இருப்பதும் குடும்பத்தில் சில சிக்கல்கள் வீண் குழப்பங்களை ஏற்படுத்தலாம் பேச்சில் கவனமாக இருங்க. கணவன் மனைவி உறவில் கவனமாக இருங்க. விட்டுக்கொடுத்து போங்க.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் ரொம்ப நல்ல மாதம். சனி, குரு,சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் என கிரகங்கள் சாதகமாக இருக்கிறது. எதிர்ப்பு விலகும். கடன் பிரச்சினை தீரும். நிதிநிலைமை நன்றாக இருக்கும். பணவரவு அபரிமிதமாக இருக்கும். சூரியன் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளதால் உங்களுடைய வேலை தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் நீங்கும். உங்களின் மதிப்பு மரியாதை கூடும். வேலை செய்யும் இடத்தில் உங்க வேலைக்கு அங்கீகாரம் கொடுக்கும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் குடும்ப உறவில் குதூகலம் ஏற்படும். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். புதன் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்கால திட்டமிடல்கள் லாபத்தைகொடுக்கும். 2ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதும் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வாக்கு ஸ்தானத்தில் உள்ள குரு வக்ர நிவர்த்தி அடைவதால் பண வரவு தாராளமாக இருக்கும். வியாபாரம் லாபம் நிறைந்ததாக இருக்கும். புதிய முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. ராகு கேது பெயர்ச்சி உங்க ராசிக்கு நிறைய நன்மை செய்யும். குடும்ப விவகாரங்களை வெளியாட்கள் யாரிடமும் வெளிப்படையாக பேசாதீங்க. உங்க பிரச்சினையில் யாரையும் தலையிட விடவேண்டாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+