க்ளூ கிடைச்சாச்சு..பெரம்பலூர் புள்ளியாமே.. புதுக்கோட்டை மாஜியாமே..வெடிக்கும் சீரியல் நடிகை சித்ரா மரண மர்மம்
சின்னத்திரை நடிகை சித்ராவுடன் தொடர்பில் இருந்த மாஜி எம்எல்ஏ யார் என்று தெரியவில்லை
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்த வழக்கில் 2 விதமான தகவல்கள் தற்போது கசிந்து வருகிறது.. இதனால் சீரியல் நடிகை சித்ரா வழக்கில் எதிர்பாராத திருப்பங்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரண முடிச்சுகள் இன்னும் இறுக்கமாகத்தான் அவிழ்க்கப்படாமல் அப்படியே கிடக்கிறது.. சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடமும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.
ஆனால், சின்னத்திரை நடிகை சித்ரா அப்படி ஒரு முடிவை எடுக்க என்ன காரணம்? அவரது மரணத்திற்கு பின்னணியில் யாராவது உள்ளார்களா என்ற பல கேள்விகள், அவரது ரசிகர்கள் மத்தியில் இன்று வரை உள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் சாதாரண தற்கொலை இல்லை என்பது தெளிவாக தெரிந்தும்கூட, அந்த மரணத்துக்கு ஒருசிலர் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்தும்கூட, இது தொடர்பான விசாரணையோ, கைது நடவடிக்கையோ, வாக்குமூலங்களோ இதுவரை இல்லை.. சித்ரா இறந்து ஒருவருடம் கடந்தும்கூட, ஒரு விடையும் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் விசாரணை
இப்படிப்பட்ட சூழலில்தான், சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் போலீசில் பரபரப்பு புகார் சொன்னார்.. அதுகூட சித்ரா மரணத்துக்கு ஒரு பதிலை கொடுக்குமா என்றால் இல்லை.. சித்ரா மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பெயரை வெளியிட்டாரா என்றால் அதுவும் இல்லை.. சித்ரா இறந்து ஒரு வருடம் ஆகியும், எதை பற்றியும் சொல்லாமல் இருந்த ஹேம்நாத், இப்போது அவரது உயிருக்கு ஆபத்து என்றதும் போலீசில் பாதுகாப்பு கேட்டு சென்றுள்ளார்..

முன்னாள் அமைச்சர்
எனினும் ஒருசில க்ளு தந்துள்ளது போலீஸ் தரப்பின் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.. சித்ராவின் மரணத்தில் ஒரு முன்னாள் அமைச்சர், மாஜி எம்எல்ஏ, தொழிலதிபர், என 4 பேருக்கு தொடர்பு இருப்பதாக புகாரில் சொல்லி உள்ளார்.. போலீசாரும் இது தொடர்பான விசாரணையை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.. இந்நிலையில், புது தகவல் ஒன்று பரவி வருகிறது.. சென்னை, பெரம்பலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள், சித்ராவின் நட்பு வட்டத்தில் இருந்துள்ளனர்..

மர்மங்கள்
சித்ரா இறந்தபோதே சித்ராவின் கணவர் ஹேம்நாத், சித்ராவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தினேஷ், சித்ராவின் அப்பா காமராஜ், அம்மா விஜயா, சகோதரி சரஸ்வதி உள்ளிட்ட பலரிடம் நசரத்பேட்டை போலீசார் விசாரித்தனர்... அப்போதே இந்த தகவல் வெளிவந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் அப்போதைய ஆளும் கட்சி முக்கிய பிரமுகர்கள் என்பதால், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் வழக்கை கிடப்பில் போட்டதாக அரசல் புரசலாக சொல்லப்பட்டது.

பெரம்பலூர் புள்ளி
குறிப்பாக, அதுமட்டுமல்ல, பெரம்பலுாரில், ஒரு நிகழ்ச்சி திறப்பு விழாவுக்கு வந்தபோது, அப்போதைய அதிமுக எம்எல்ஏ ஒருவர் செய்த டார்ச்சர்தான் காரணம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இப்போது ஹேம்நாத் புகார் தந்த பிறகுதான், விசாரணை முடுக்கிவிடப்போவதாக தெரிகிறது.. இதில், சம்பந்தப்பட்டவர்கள் பெரம்பலூர் அரசியல்வாதியாம்.. அதேபோல், புதுக்கோட்டை மாஜி எம்எல்ஏவுக்கும் தொடர்பு உள்ளதாம்.. இந்த மாஜியைதான், இனி விசாரிக்க போலீசார் திட்டமிட்டு வருகிறார்களாம்..

புதுக்கோட்டை புள்ளி
இதற்காக முறைப்படி அரசின் ஒப்புதலுக்காகவும் காத்திருப்பதாக கூறப்படுகிறது.. மேலும், சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, அவருடன் தொடர்பில் இருந்த அரசியல், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என தனித்தனியாக லிஸ்ட் தயாராகி உள்ளதாம்.. இதற்கும் மேலிட அனுமதிக்காக போலீசார் காத்திருப்பதாக தெரிகிறது..

எதிர்பார்ப்பு
எதையுமே முறைப்படியும், சட்டப்படியும் செய்ய வேண்டும் என்பதால், ஒவ்வொன்றையும் மிக ஜாக்கிரதையாக காவல்துறை நகர்த்தி வருகிறது. என்றாலும், சித்ராவின் மரணத்துக்கு காரணமான அந்த அரசியல் புள்ளிகள் கூடிய சீக்கிரம் விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.. கூடிய சீக்கிரம் சித்ராவின் மரணத்தின் மர்ம முடிச்சுகளும் அவிழ்க்கப்படும் என்று நம்பப்படுகிறது.. பார்ப்போம்..!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications