பெட்ரோல் பங்குகளில் கஸ்டமருக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய சலுகைகள்.. லிஸ்டில் இதுகூட இருக்கா.. அடடே!
சென்னை: பெட்ரோல் பங்கில் காற்று மட்டும் இலவசமாக அடித்துக்கொள்ளலாம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் பெட்ரோல் பங்கில் காற்று அடித்துக்கொள்வது மட்டுமின்றி, வாகன ஓட்டிகளுக்கு மேலும் 5 வசதிகளை இலவசமாக செய்து கொடுக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன. இந்த 6 வசதிகளையும் செய்து கொடுத்தால் மட்டுமே பெட்ரோல் பங்கிற்கு உரிமம் வழங்கப்படும் என்ற விதி இருக்கிறது.
பெட்ரோல் பங்குகளை பயன்படுத்தாத வாகன ஓட்டிகளே இருக்க முடியாது. வாரத்திற்கு குறைந்தது மூன்று நாட்களாவது பெட்ரோல் பங்குகளை வாகனம் ஓட்டுபவர்கள் பயன்படுத்தி விடுவார்கள். பைக்குகளுக்கோ, கார்களுக்கோ பெட்ரோல், டீசல் அடிக்க செல்லும் போது, பெட்ரோல் பங்க்கில் இலவசமாக காற்று அடிக்க வசதி இருக்கும்.

நகரங்களில் ஆங்காங்கே பெட்ரோல் பங்க்குகள் கண்ணில் தென்படும். இதனால், போட்டிகளை சமாளிக்கவும் வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும் இதுபோன்று காற்று அடிக்கும் வசதி போன்றவற்றை பெட்ரோல் பங்குகள் வைத்து இருக்கிறது என வாடிக்கையாளர்கள் பலரும் கருதலாம். ஆனால் உண்மையில் பெட்ரோல் பங்குகள் வாகனங்களுக்கு காற்று அடிக்கும் வசதியை செய்து கொடுத்து இருக்க வேண்டும் என்பது பெட்ரோல் பங்குகளுக்கான அடிப்படை விதிகளில் ஒன்றாகும்.
எனவே வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக பெட்ரோல் பங்குகளில் காற்று பிடிக்கும் வசதியை வைத்து இருக்க வேண்டும். இவற்றில் இலவசமாகவே வாகன ஓட்டிகள் காற்று பிடித்து கொள்ளலாம். இது தவிர வேறு சில வசதிகளையும் பெட்ரோல் பங்கில் வாகன ஓட்டிகளுக்க்கு இலவசமாக செய்து கொடுக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதாவது, பெட்ரோல் பங்க் அமைக்கும் போது, வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக செய்து கொடுக்க வேண்டிய ஆறு வசதிகளையும் செய்து கொடுத்தால் மட்டுமே உரிமம் வழங்கப்படும் என்ற விதி இருக்கிறது.
பெட்ரோல் பங்கில் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக கொடுக்க வேண்டிய ஆறு விதிகள் என்னவென்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
* முதலாவதாக அனைத்து பெட்ரோல் பம்பிலும் காற்று நிரப்பும் வசதியை இலவசமாக செய்து கொடுத்து இருக்க வேண்டும். பெட்ரோல் பங்கில் காற்று பிடிப்பதற்கு தனியாக கட்டணம் வசூலிக்க கூடாது.
* அடுத்ததாக பெட்ரோல் பம்பில் தூய்மையான குடி நீர் வசதி இருக்க வேண்டும். பெட்ரோல் பங்கிற்கு வரும் வாகன ஓட்டிகள், எந்த வித கூடுதல் கட்டணமும் செலுத்தமல் இலவசமாக சுத்தமான குடி நீரை குடிக்க முடியும். இதுவும் மிகவும் முக்கியமான விதிகளில் ஒன்றாக உள்ளது.
* டாய்லட் வசதி கண்டிப்பாக அனைத்து பெட்ரோல் பங்குகளில் இருக்க வேண்டும். தொலை தூரங்களுக்கு செல்லும் போது, இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்றால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்குகளில் அமைக்கப்பட்டுள்ள டாய்லட்களில் எந்த வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக டாய்லட்டை பயன்படுத்தி கொள்ளலாம்.
* 4-வதாக டெலிபோன் வசதி தேவைப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் பெட்ரோல் பம்புகள். வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்ப வரும் போது ஏதேனும் அவசர தேவை என்றால் பெட்ரோல் பங்கில் உள்ள டெலிபோன் வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
* அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் முதலுதவி பெட்டி அவசியம். ஏதேனும் அவசர மருத்துவ உதவி தேவைப்படால் முதலுதவி அளிக்கும் வகையில், அடிப்படை மருந்து மற்றும் மருத்துவ பொருட்களை வைத்து இருக்க வேண்டும். குறிப்பாக வாகன ஓட்டிகள் விபத்தில் ஏதேனும் சிக்கிவிட்டால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க தேவையான முதலுதவி பெட்டி இருக்க வேண்டும்.
* தீ விபத்து எதேனும் ஏற்பட்டால் உடனடியாக தீயை அணைக்கும் விதமாக தீயை அணைக்கும் கருவிகள் வைத்து இருக்க வேண்டும். இதை பெட்ரோல் பங்கிற்கு செல்லும் வாகன ஓட்டிகள் பார்த்து இருக்க முடியும். எளிதாக கண்ணில் தெரியும்படி ஆங்காங்கே சிவப்பு நிற வாளிகள் தண்ணீர், மணல்கள், உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications