மகள் சஹானாவை மிஸ் செய்யும் நடிகர் சேதுராமன்.. ஆவியுடன் பேசிய நபர் சொன்னதாக தந்தை உருக்கம்
சென்னை: என் மகனின் ஆவி என்னை கவலைப்படாமல் இருக்க சொன்னதாக ஆவிகளிடம் பேசும் நபர் தெரிவித்ததாக நடிகர் சேதுராமனின் தந்தை டாக்டர் விஸ்வநாதன் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
பிரபல மருத்துவரும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தவருமானவர் டாக்டர் சேதுராமன். இவர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.

சேதுராமனுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு உமையாள் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி சேதுராமன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர் இறந்த போது உமா இரண்டாவது முறையாக 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் சேதுராமனுக்கு வேதாந்த் என்ற மகன் பிறந்தார். ஏற்கெனவே சஹானா என்ற மகள் உள்ளார். இந்த மகளை சேதுராமன் செய்த லூட்டிகளை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்க்கும் போது இத்தனை சிறிய வயதில் இந்த குழந்தை தந்தையை இழக்க நேரிட்டுவிட்டதே என்ற கவலை எழுகிறது. அதே நேரம் மருத்துவரான சேதுராமன் தனது உடலை ஒழுங்காக கவனித்துக் கொள்ளவில்லையோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் மறைந்த நடிகர் சேதுராமனின் தந்தை டாக்டர் விஸ்வநாதன் குறித்து பேசியது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில் என் மகன் இறப்பதற்கு முன்பு நன்றாக இருந்தார். தினமும் வாக்கிங் சென்றுவிட்டுதான் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்வார். அவருக்கு ஆன்மீகத்திலும் ஈடுபாடு அதிகமாகவே இருந்தது.
இந்த நிலையில் கொரோனா காலம் தொடங்கியது. அப்போது யூடியூப்பில் தந்தை மகனுக்கு சொல்ல வேண்டிய 5 விஷயங்களை வீடியோவாக்க சொன்னார். என் மகன் திடீரென மாரடைப்பால் இறந்ததும் எங்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. 36 வயதெல்லாம் இறக்கும் வயதா. அவர் இறந்த பிறகு பலர் எங்களை தொடர்பு கொண்டு ஆறுதலாக பேசினர்.
அந்த வகையில் ஆவிகளிடம் பேசும் நபர் ஒருவர் என்னிடம் பேசினார். அதில் அப்பாவை கவலைப்பட வேண்டாம் என்றும் மகளை மிஸ் செய்வதாகவும் சேதுவின் ஆவி தெரிவித்ததாக அவர் கூறியிருந்தார். என்னதான் மகன் இறப்பிற்கு ஆறுதல் கூறினாலும் அவர் இல்லையே என்ற வேதனை இல்லாமல் இல்லை, தினம் அவரை நினைத்து அழுகிறோம். அவர் எந்த வகையிலாவது எங்களுக்கு திரும்ப கிடைப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என விஸ்வநாதன் தெரிவித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications