தான செட்டில்மெண்ட் பத்திரம் பதிய இனி வெறும் 1000 ரூபாய்? தமிழகத்தில் சொத்து வச்சிருக்கவங்க கவனியுங்க
சென்னை: சென்னை: தமிழகத்தில் ஒரு குடும்பத் தலைவர் மரணமடைந்த பின்னர், அவரது சொத்தை வாரிசுதாரர்கள் பெயரில் மாற்றுவதற்கே ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை செலவாகும் நிலை இருக்கிறது.. இந்த நிலையை மாற்ற, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, தமிழக அரசுக்கும் TNRERA-வுக்கும் முக்கியமான கோரிக்கை வைத்திருக்கிறார்.. உத்தரப் பிரதேசத்தில் வெறும் ரூ.1,000-ல் வாரிசு பெயர் மாற்றம் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில், தமிழகத்திலும் இதே நடைமுறை வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் வீடு மற்றும் மனை உரிமையாளர்கள் மரணமடைந்த பின்னர், அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்களுக்கு சொத்து உரிமை மாற்றம் செய்வதில் பொதுமக்கள் நிறைய பொருளாதார மற்றும் நிர்வாக சிக்கல்களை எதிர்கொண்டு வந்தனர்.அ இந்த பிரச்சினைக்கு தீர்வாக, UP-RERA தன்னுடைய Regulation 47-ல் திருத்தம் செய்தது.

அதன்படி, வாரிசுதாரர்களுக்கு சொத்து உரிமை மாற்றுவதற்கு இனி வெறும் ரூ.1,000 மட்டுமே செயலாக்க கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.. இது தேசிய அளவில் முன்மாதிரியான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கட்டண சுமை
பல மாநிலங்களும் இந்த மாதிரியை பின்பற்ற வேண்டும் என்று ரியல் எஸ்டேட் நிபுணர்கள் சொல்கிறார்கள்.. ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இது பெரும் நிவாரணமாக அமைந்திருக்கிறது என்று UP மக்கள் சொல்கிறார்கள்.. தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான சொத்து உரிமையாளர்கள் இந்த சீர்திருத்தத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்..
தமிழகத்தில் தற்போதைய நடைமுறையின்படி, குடும்ப உறுப்பினர்களுக்குள் மேற்கொள்ளப்படும் தான செட்டில்மெண்ட், பாகப்பிரிவினை, விடுதலை ஆவணம், ஆக்ரிமெண்ட் செட்டில்மெண்ட் மற்றும் வாரிசு பெயர் மாற்றம் போன்ற ஆவணங்களை பதிவு செய்யும்போது சொத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் குறைந்தபட்சம் 1% முத்திரைத் தீர்வையும் 1% பதிவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
இதனால் பல நேரங்களில் பொதுமக்கள் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை கட்டாயம் செலவழிக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.. சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்களில் சொத்து மதிப்பு அதிகமாக இருப்பதால் கட்டணமும் இன்னும் அதிகமாக போகிறது.
நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இது பெரும் சுமையாக இருக்கிறது.. வீட்டை வாங்கவே கஷ்டப்பட்ட மக்கள், பெயர் மாற்றத்திற்கும் மீண்டும் கஷ்டப்பட வேண்டிய நிலை மாற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்..
தமிழக அரசுக்கு கோரிக்கை
இதோடு மட்டும் நில்லாமல், ஆவண தயாரிப்பு செலவுகள், சட்ட ஆலோசனை கட்டணங்கள், இடைத்தரகர்கள் மூலம் ஏற்படும் கூடுதல் செலவுகள் மற்றும் அலுவலக அலைச்சல்கள் காரணமாக நடுத்தர மக்களும் சாதாரண குடும்பங்களும் இன்னும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.. ஏற்கனவே மனவேதனையில் இருக்கும் குடும்பத்தினரிடம் இந்த அளவு கட்டணங்கள் வசூலிப்பது மனிதநேய அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று டாக்டர் ஹென்றி தன்னுடைய அறிக்கையில் சொல்கிறார்.
குடும்பத் தலைவரை இழந்த துயரத்தில் இருக்கும்போதே இந்த நிர்வாக சுமை அவர்களை மேலும் வாட்டுகிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.. இந்த நிலைமை மாற உடனடியாக சட்ட திருத்தம் தேவை என்று FAIRA வலியுறுத்துகிறது.. மேலும், வாரிசு சான்றிதழ் பெறுவதிலும் பொதுமக்கள் நிறைய சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது..
FAIRA கோரிக்கை என்ன?
டாக்டர் ஹென்றி, தமிழக அரசு, தமிழ்நாடு பதிவுத்துறை மற்றும் TNRERA ஆகிய மூன்று அமைப்புகளுக்கும் நேரடியாக இந்த கோரிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தைப் போலவே, தமிழகத்திலும் தான செட்டில்மெண்ட், பாகப்பிரிவினை, விடுதலை ஆவணம் உட்பட குடும்ப உறுப்பினர்களுக்குள் நடைபெறும் அனைத்து சொத்து உரிமை மாற்றங்களுக்கும் ரூ.1,000 மட்டுமே ஒரே கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
இந்த சீர்திருத்தம் நடுத்தர மக்களுக்கும் சாதாரண குடும்பங்களுக்கும் பெரும் நிவாரணமாக இருக்கும் என்று FAIRA நம்பிக்கை தெரிவிக்கிறது.. தமிழக அரசு இந்த கோரிக்கையை கவனத்தில் எடுத்து சீக்கிரமாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள்..!!!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications