தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சாதாரணமாகிவிட்டது - அண்ணாமலை குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சாதாரணமாகிவிட்டது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

போதைப் பொருள் தடுப்பு வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,632. 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளில் போதைப் பொருள் வழக்கில் 1122 பேர் மட்டுமே தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamilnadu Annamalai sexual harrasment

தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில், அதற்கு எதிரான கைது நடவடிக்கைகள் குறைவாக இருப்பது ஏன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வெளியே 18 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். உதவி கேட்டு அலறிய அப்பெண்ணின் அலறல் சப்தத்தை கேட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்தப் பெண் காப்பற்றப்பட்டார்.

தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சாதாரணமாகிவிட்டது. போதைப் பொருள் என்பது எளிதில் கிடைக்கக்கூடிய பொருளாக மாறிவிட்டது. குறைவான அளவில் போதைப் பொருள் தொடர்பான கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதன் மூலமாக, போதைப் பொருள் கடத்தல்காரர்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்கிறதா.

போதைப் பொருள் தடுப்பு வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரே ஆண்டில் 9,632 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால். 2022 முதல் 2224 ஆம் ஆண்டு வரை போதைப் பொருள் வழக்கில் 1, 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கஞ்சா, மெத்தபெட்டமைன் போதைப் பொருள் அதிகரித்துள்ள நிலையில், கைது நடவடிக்கை குறைந்தது எப்படி என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் காட்டியுள்ளவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிவதற்கு அரசு வழிவகை செய்து வருகிறது. போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளதால் தான் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாதுகாப்பை உறுதி செய்வதற்குள் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+