அக்காவும், தங்கையும்.. காமுகனின் 50 வீடியோக்கள்.. மிரண்டு போன போலீசார்.. பகீர் தகவல்கள்

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த பெருமாளை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மொத்தம் 50 ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன.. அந்த 50 ஆபாச வீடியோக்களிலும் மளிகை கடை பெருமாளே இருந்துள்ளார்.. சிறுமிகளை சீரழித்த வழக்கில் மளிகை கடை பெருமாளிடம் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தி உள்ளனர்.

அண்ணாநகர் கிழக்கு, ஆர்விநகரை சேர்ந்தவர் பெருமாள்.. 48 வயதாகிறது.. ஜூஸ் கடை வைத்துள்ளார்.. அதேபகுதியை சேர்ந்தவர் ஷீலா.. 30 வயதாகிறது.. இவரது கடைக்கு, ஜுஸ் குடிக்க அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஷீலா வீட்டிற்கு அவ்வப்போது சென்று பெருமாள் உல்லாசமாக இருந்துள்ளார்.. அப்போதுதான் ஷீலாவின் 9 வயது மகளுக்கும் பெருமாள் பாலியல் தொந்தரவு தந்துள்ளார்..

குழந்தை

குழந்தை

அதை செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, மிரட்டி தொடர்ந்து சிறுமியை பலாத்காரமும் செய்து வந்துள்ளார். இந்த விஷயம் ஷீலாவுக்கு தெரிந்தாலும் கண்டும் காணாமல் இருந்துள்ளார்.. ஷீலாவின் வீட்டிற்கு அவரது தங்கை மாலா என்பவர் வந்துள்ளார்.. மாலாவுக்கு 28 வயதாகிறது.. மாலாவுடனும் பெருமாளுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.. மாலாவின் 4 வயது மகளையும் பெருமாள் விட்டு வைக்கவில்லை.

 ஷீலா

ஷீலா

ஷீலாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த 11 வயது சிறுமியையும் பெருமாள் பாலியல் பலாத்காரம் செய்ததையறிந்து அந்த வீட்டு பெற்றோர் கொந்தளித்து, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஆலோசனை மையத்திற்கு சென்று புகார் தந்தனர்.. அப்போதுதான் விஷயம் வெடித்து கிளம்பியது.. குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசுக்கு புகாரை அனுப்பவும், பெருமாளை சுற்றி வளைத்து பிடித்தனர்.

 சிறை

சிறை


4 வயது சிறுமி முதல் 17 வயது சிறுமி வரை 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை பெருமாள் ஒப்புக் கொண்டார். அவருக்கு உடந்தையாக இருந்த ஷீலாவையும், மாலாவையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்... இப்படி தங்கள் குழந்தைகளை பாலியல் கொடுமை செய்வதற்கு 500 முதல் 2,000 ரூபாய் வரை ஷீலா, மாலாவுக்கு பெருமாள் தந்து வந்தாராம்.. அதனால்தான் அவர்கள் அமைதியாகவே இருந்து ஒத்துழைப்பு தந்துள்ளனராம்..

குட்கா

குட்கா

இந்நிலையில்தான், பெருமாள் மிகவும் ரகசியமாக குட்கா விற்பனை செய்வதாக டி.பி.சத்திரம் மகளிர் போலீசாருக்கு இன்னொரு புகார் வந்தது.. அதனடிப்படையில் போலீஸ் படை ஒன்று பெருமாள் கடைக்கு சென்று தீவிர சோதனை நடத்தினார்கள்... அப்போது பெருமாளின் கடைக்குள் குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது... இந்த குட்கா பாக்கெட்டுகளை எங்கிருந்து வாங்கினீர்கள்? என்று போலீசார் கேட்டனர்.. ஆனால் அதற்கு பெருமாள் சரியாக பதில் சொல்லவில்லை.

 செல்போன்

செல்போன்

ஒருவேளை பெருமாளின் செல்போனை ஆராய்ந்தால் அதுகுறித்த தகவல் ஏதாவது கிடைக்கலாம் என்று நினைத்து, பெருமாளின் செல்போனை கேட்டனர்.. ஆனால், போலீசார் கேட்டும் பெருமாள் செல்போனை தர மறுத்தார்.. இதையடுத்து தங்கள் பாணியில் செல்போனை வாங்கினர்.. யார் யாரிடம் பெருமாள் பேசியிருப்பார் என்று கேலரி லிஸ்ட்டை ஆராய போனால், போலீசாருக்கே ஷாக் தந்தார் பெருமாள்..!

 ஆபாச படம்

ஆபாச படம்

அத்தனை ஆபாச படங்களை அதில் பதிவு செய்து வைத்திருந்தார்.. கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருக்குமாம்.. குட்கா விற்கும் பெருமாளுக்கு, ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் இருந்திருக்கலாம், ஆபாச படங்களை பெருமாளே இணையத்தளத்தில் இருந்து டவுன்லோடு செய்திருக்கலாம் என்றும் ஆரம்பத்தில் போலீசார் நினைத்தனர்...

சந்தேகம்

சந்தேகம்

ஆனாலும் மளிகை வியாபாரிக்கு எப்படி இவ்வளவு படங்களை டவுன்லோடு செய்ய நேரம் கிடைத்திருக்கும் என்ற சந்தேகம் வந்தது.. அதற்கு பிறகுதான் அந்த வீடியோ பதிவுகளை போலீசார் பார்த்தனர்.. மறுபடியும் ஷாக் ஆனார்கள்.. காரணம், அந்த 50 ஆபாச வீடியோ காட்சிகளிலும் பெருமாள்தான் இருந்தார்... கள்ளக்காதலியுடன் இருக்கும் வீடியோ, கள்ளக்காதலியின் மகள்களுடன் இருக்கும் வீடியோ என நிறைந்து கிடந்தன. அந்த ஆபாச காட்சிகளை பார்த்ததும் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர்...

 சிறுமிகள்

சிறுமிகள்

பெருமாளே அத்தனை வீடியோக்களையும் பாலியல் டார்ச்சர் தரும்போது எடுத்துள்ளார்.. சில வீடியோவில் சிறுமிகளை மிரட்டி கொண்டே இருக்கிறாராம்.. . இதைதவிர, 3 சிறுமிகள் புதிதாக இருக்கிறார்களாம்.. அவர்கள் யார் என்றே தெரியவில்லையாம்.. அதனால் 3 சிறுமிகள் யார்? என்று போலீசார் விசாரணை நடந்தது.. பிறகுதான் அது பக்கத்து வீட்டு குழந்தைகள் என்பது தெரியவந்தது.. இந்த சிறுமிகளுக்கு 4 முதல் 13 வயது வரை இருக்கும்... பெருமாள் நடத்திய பாலியல் அத்துமீறல்கள் பற்றி அந்த சிறுமிகளுக்கு உரிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது..

 தாய்

தாய்

மேலும் பெற்ற தாயே மகள்களை தாரை வார்த்ததால் அந்த 5 சிறுமிகளையும் மிக எளிதாக பெருமாளால் பாலியல் பலாத்காரம் செய்ய முடிந்துள்ளது.. இப்படியே 7 வருடமாகவே நடந்து வந்திருக்கிறது.குட்கா வேட்டைக்கு போன இடத்தில், பெருமாளின் காம வேட்டை அம்பலமாகிவிட்டது.. ஒருவேளை குட்கா புகாரை எடுக்காமல் இருந்திருந்தால், மேலும் பல சிறுமிகளை பெருமாள் நாசம் செய்திருக்கக்கூடும் என்கிறார்கள்.. இப்போது பெருமாள் ஜெயிலில் உள்ளார்.. தொடர் விசாரணையும் அவரிடம் நடத்த உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+