15 வயசு பிஞ்சு.. ஒரு பாதிரியார் செய்யக்கூடிய காரியமா இது.. அதுவும் 8 வருஷங்களாக.. ஷாக்..!

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த பாதிரியார் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு பிரபல பின்னணி பாடகியின் மகள் என்றுகூட பார்க்கவில்லையே.. 15 வயது சிறுமி என்றுகூட கரிசனம் காட்டவில்லையே.. அந்த குழந்தையை 8 வருஷமாக பாலியல் தொல்லை தந்துள்ளார் ஒரு பாதிரியார்.. இப்போது அந்த பாதிரியார் உட்பட 4 பேரை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த பிரபலமான பின்னணி பாடகி அவர்.. தன்னுடைய 15 வயது மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார்...

இவர் தனியார் டிவிக்களில் நடைபெறும் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும், சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும் வந்துள்ளார்.

பாடகி

பாடகி

இதனால் அடிக்கடி புரோகிராமுக்கு சென்று வருவதால், தன்னுடைய மகளை சாலிகிராமத்தில் உள்ள சகோதரி வீட்டில் தங்க வைத்துள்ளார்... அதனால் அந்த குழந்தையும், இந்த 8 வருஷமாகவே சித்தியின் அரவணைப்பில் இருந்து வருவதாக தெரிகிறது. இப்போது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்பில் படித்து வருகிறாள் சிறுமி..

 பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

இந்த சித்தியின் கணவர் பெயர் ஜான் ஜெஷில்.. சில சமயங்களில் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார்.. இவருடன் சேர்த்து மேலும் 3 பேரும் சிறுமிக்கு தொல்லை தந்து வந்திருக்கிறார்கள்.. இவர்களும் சித்தியின் உறவினர்கள் ஷகீனா ஷான், கிளாரோ ஆகியோர் ஆவர்.. இவர்கள் குடும்பத்தோடு கீழ்ப்பாக்கம் சர்ச்சுக்கு செல்வது வழக்கமாம்..

 பாதிரியார்

பாதிரியார்

அங்கே சென்று வந்தபோது அந்த சர்ச் பாதிரியார் ஹென்றியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் அவரும் சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்துள்ளதாக கூறப்படுகிறது.. இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி, தன் அம்மாவிடம் நடந்ததை எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லவும், இதை கேட்டு அதிர்ந்து போயுள்ளார் பின்னணி பாடகி.. இதில் பலமுறை டார்ச்சர் தந்தது அந்த பாதிரியார்தானாம்..

 பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை


உடனடியாக கீழ்ப்பாக்கம் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார்.. அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து சிறுமியின் சித்தப்பா, பாதிரியார் உட்பட 4 பேரை போக்சோவில் கைது செய்துள்ளனர்.. இவர்களை தவிர, சிறுமியின் மற்ற உறவினர்களிடமும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்... இந்த 8 வருஷங்களாகவே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு வருவதாக விசாரணையில் தெரிய வந்திருப்பது போலீசாரை அதிர வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+