மொத்தம் 70 பெண்கள்.. "நிர்வாண" டார்ச்சர்.. பகீர் இளைஞர்.. போலீஸையே வெலவெலக்க வைத்து.. ஷாக்!
70 பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டார்
சென்னை: நாகர்கோயில் காசிக்கே ஒருத்தர் டஃப் தந்துள்ளார்.. மொத்தம் 70 பெண்களாம்.. நிர்வாண போட்டோக்களை வைத்து இவர் செய்த அட்டகாசத்தினால், இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார் இந்த இளைஞர்..!
விஜயவாடாவை சேர்ந்தவர் சுமன்.. ஹைதராபாத்தில் தங்கி அமேசான் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்...!
பகல் முழுவதும் கம்பெனியில் வேலை பார்த்து வரும் சுமன், ராத்திரி நேரம் ஆகிவிட்டால், பெண்ணாக அவதரித்து விடுவாராம்.

குரல்
ஆம்.. இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் தன்னை ஒரு பெண் போலவே சித்தரித்து படம் போட்டு, மற்ற பெண்களுக்கும் வலை வீசுவார்.. இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு துவங்கினார்.. தனக்கு ஒரு பெண் பெயரை இவரே வைத்து கொண்டார். பிறகு, இளம்பெண்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்களுக்கு குறி வைப்பார்.

70 பெண்கள்
இந்த 2 வருஷத்தில் மட்டும் சுமன் போட்ட மெகா பிளானில் 70 பெண்கள் சிக்கி கொண்டார்கள்.. பெண் பெயரில் பேர் உள்ளதாலும், பெண் போட்டோவை வைத்திருந்ததாலும், இளம் பெண்கள் சிலர் தானாகவே இவரிடம் நட்பு கொள்ள வந்துள்ளனர்.. அப்படி கிடைத்த இந்த 70 பெண்களிடமும் ஆரம்பத்தில் சகஜமாகவே பேசி வந்தார். அவர்களிடம் தனிப்பட்ட முறையிலும் பேச்சை தொடங்கி உள்ளார்.

போட்டோக்கள்
அவர்களின் போட்டோக்களையும் தனக்கு அனுப்பும்படி உரிமையுடன் கேட்டுள்ளார். நாள் ஆக ஆக, தன்னுடைய அரை நிர்வாண, முழு நிர்வாண போட்டோக்களை அந்த பெண்களுக்கு அனுப்பியிருக்கிறார்.. அது மட்டுமில்ல, தான் சொல்வது போல கேக்கவில்லையென்றால், உங்களின் போட்டோக்களை எல்லாம் மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்டு விடுவேன் என்றும் அந்த பெண்களை மிரட்டியுள்ளார்...

ஜெயில்
இதில் ஒரு பெண் அளவுக்கு அதிகமாகவே பாதிக்கப்பட்டு விட்டார். ஒருகட்டத்தில் சுமனின் தொல்லை பொறுக்க முடியாமல், ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தந்தார்.. அப்போதுதான் போலீசார் விசாரணையை ஆரம்பித்தபோது, 70 பெண்களும் இப்படித்தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்தது. இதன்பிறகு சுமனை கைது செய்து இப்போது ஜெயிலில் அடைத்துள்ளனர். அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருகின்றது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications