அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன மாதிரியே செய்யுறோம்.. ஆனா அனுமதி கொடுங்க! மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனுமதி பெறாமல் போராடுவதால்தான் மாணவர்களை கைது செய்கிறோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருந்தார். இதை குறிப்பிட்டு.. நாங்கள் போராட அனுமதி கேட்கிறோம், அனுமதி கொடுங்கள் என்று மாணவர் சங்கத்தினர் கோரியுள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் தீவிர போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். ஆனால், போராடும் மாணவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்.

SFI

விஜய் தலைமையிலான தவெக அரசு, நீட் எதிர்ப்பு கொள்கையில் உறுதியாக இருப்பதாக சொல்கிறது. ஆனால், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் அவர்களை கைது செய்கிறது. இந்த இரட்டை நிலைப்பாடு ஏன்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சென்னை, திருவண்ணாமலை, வேலூர், கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை என தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI) தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படி இருக்கையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சங்கத்தின் நிர்வாகிகள், "தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க கூடாது. அனுமதி இல்லாமல் போராடினால் கைது செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறுகிறார். அப்படியெனில் போராட எங்களுக்கு அனுமதி கொடுங்கள். நாங்கள் இன்று கூட கமிஷ்னர் அலுவலகத்தில் போராட்டத்திற்கு அனுமதி கேட்டுவிட்டுதான் வந்திருக்கிறோம். இப்போது வரை அனுதி அளிக்கப்படவில்லை. இன்று முதல் காத்திருப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். எனவே காவல்துறை அனுதி வழங்க வேண்டும்" என கூறியிருக்கின்றனர்.

முன்தாக தவெகவுக்கு ஆதரவளித்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) காவல்துறை அராஜக போக்கை கடைபிடிப்பதாகவும், போராடும் மாணவர்களை சமூக விரோதிகளை போல கைது செய்வதாகவும் குற்றம்சாட்டியிருந்தது.

"போராட அனுமதிக்காததால் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழ்நாடு காவல்துறையால் அலைக்கழிக்கப்படுகின்றனர். மூன்று நாட்களாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை போராடும் ஜனநாயக உரிமைக்கு எதிரானது.

காவல்துறை சென்னையில் திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர் மற்றும் கோவை, மதுரை, கடலூர், தஞ்சை உள்ளிட்ட பல நகரங்களில், கல்வி வளாகத்திற்குள் புகுந்து கைது செய்துள்ளது இதுவரை நடந்திராத செயல். இது மிக மோசமான அத்துமீறல் ஆகும். காவல்துறை கல்லூரி வளாகங்களுக்குள் சென்று மாணவர்களை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. இதுபோன்ற ஜனநாயக விரோத அத்துமீறல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

போராடும் உரிமையை நசுக்குகின்ற தமிழ்நாடு காவல்துறையின் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். காவல்துறைக்கு பொறுப்பாக இருக்கிற மாநில முதலமைச்சர் ஜனநாயக உரிமைகள் சார்ந்த போராட்ட நடவடிக்கைகளை ஒடுக்க நினைக்கும் காவல்துறையை கட்டுப்படுத்த வேண்டும்."என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+