எது நாய்க்கறி.. மொத்த கறியும் ஒரு பீஸ் குறையாமல் வந்தாகணும்.. ஷகிலா பானு ஆவேசம்
பறிமுதல் செய்யப்பட்டவை நாய்க்கறி இல்லை என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: நாய்க்கறியா? 800 கிலோ நாய்க்கறியில ஒரு பீஸ் கூட குறையக்கூடாது... மொத்தமா என்கிட்ட வந்தாகணும் என்று வெடித்து கதறி பேசுகிறார் ஷகிலா பானு!!
கொஞ்ச நாளைக்கு முன்னாடி பிரியாணியில பூனைக்கறி போடப்பட்டதாக சொல்லப்பட்டது. அந்த பிரச்சனை ஓய்ந்தது.
தற்போது சென்னை ஆட்டுக்கறிக்கு பதிலாக நாய்க்கறி பயன்படுத்தப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆட்டுக்கறி விலை ரொம்ப அதிகமாக விற்பதால்தான் நாய்க்கறியை கலந்துகட்டி பிரியாணி போடுவதாகவும் பகீர் கிளம்பியது.

பறிமுதல்
அதற்காக எக்மோர் ஸ்டேஷனில் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இரண்டாயிரம் கிலோ நாய்க்கறி இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டு அதனை பறிமுதலும் செய்தனர். இந்த விஷயம் சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆட்டுக்கறி
பறிமுதல் செய்யப்பட்டவை மாதிரி பரிசோதனைக்கும் கொண்டு போகப்பட்டது. இதனிடையே, ரயிலில் வந்த கறிகளை எப்படி நாய்க்கறி என்று சொல்லலாம், அது எல்லாமே ஆட்டுக்கறிதான் என்று ஒரு கும்பல் கிளம்பி போராட்டத்திலும் குதித்துள்ளது.

எல்லா கறியும் என்னுடையது
குறிப்பாக ஷகிலா பானு என்பவர் இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசினார். இவர் ஒரு பிரியாணி கடை ஓனர். சென்னையில் பெரிய பெரிய 3 பிரான்ஞ் பிரியாணி கடைகளை வைத்து நடத்தி வருகிறார். ரயிலில் வந்திறங்கிய 800 கிலோ கறியும் இவருடையதுதானாம்.

நாய்க்கறியா சாப்பிடுவோம்?
செய்தியாளர்களிடம் ஷகிலா பேசும்போது, "நாங்க முஸ்லீம்ங்க... மாட்டுக்கறிதான் சாப்பிடுவோம். அது எப்படி நாய்க்கறி சாப்பிடுவோம்.. எப்படிங்க நாய்க்கறியை விப்போம்.. இது யாரோ வேண்டாதவங்க பண்ண வேலை. முதல்ல ரயிலில் வந்தது நாய்க்கறிதான் என்பதற்கு என்ன ஆதாரம்? இப்படி என்ன, ஏதென்னு தெரியாததுக்கு முன்னமேயே என் கறியில பெனாயில ஊத்தி வச்சி நாசம் பண்ணியிருக்காங்க.

தண்டனை ஏத்துக்கறோம்
பினாயில ஊத்தனது போக மீதி கொஞ்சம் கறி பினாயில் ஊத்தாமலும் இருக்கு. அதை முதல்ல செக் பண்ணி பாருங்க எல்லாரும். அது என்ன நாய்க்கறியா? இல்லை ஆட்டுக்கறியா?ன்னு தெரியும். அப்படி நாய்க்கறிதான்னு தெரிஞ்சிட்டா, என்ன தண்டனை கிடைக்குதோ அதை நாங்க ஏத்துக்கறோம்.
கறி வந்தாகணும்
ஏதோ ஒரு சைக்கோ நாய்க்கறியை வெட்டி வித்தான்றதுக்காக எங்க ஆட்டுக்கறியை இப்படி சீஸ் பண்றது சரியில்லை. ராஜஸ்தான்ல இருந்து நாங்க ஸ்பெஷல்லா இந்தக் கறியை வரவழைக்கிறோம். எங்க கறி எங்களுக்கு வந்தாகணும்." என்று கொதித்து போய் பேசினார் ஷகிலா பானு.

குறைந்த கூட்டம்
உண்மையிலேயே நேத்து ஞாயிற்றுகிழமை சென்னையில் பெரிய பெரிய அசைவ ஹோட்டல்களில் எல்லாம் ஈயாடிக்கொண்டிருந்தது. கிலோ 150 ரூபாய் என்று போர்டு வைத்த பிரியாணி ஸ்டால்களில் நிறைந்து வழியும் கூட்டம் நேத்து குறைந்தே இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications