அரசியலில் இனிதான் என் ஆட்டம் ஆரம்பம்... போக போக பாருங்க - அதிரடி காட்டும் ஷகீலா
அரசியலுக்கு இப்போதான் வந்திருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா பல விஷயங்களை கத்துக்கிட்டு இருக்கேன். இனி என் ஆட்டத்தை போகப்போக பார்ப்பீங்க என்று நடிகை ஷகீலா கூறியுள்ளார்.
சென்னை: குஷ்புவுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று நடிகை ஷகீலா கூறியுள்ளார். எனக்கு அவர் சீனியர். காங்கிரசில் நான் இணைந்தது போல, இந்த கட்சியில் இருந்து அவர் விலகிச் சென்றதற்கும் ஒரு காரணம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு இப்போதான் வந்திருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா பல விஷயங்களை கத்துக்கிட்டு இருக்கேன். இனி என் ஆட்டத்தை போகப்போக பார்ப்பீங்க என்றும் ஷகீலா தெரிவித்துள்ளார்.
Recommended Video

சினிமாவில் ஓஹோ என்று புகழோடு இருந்த பல நடிகைகள் தற்போது அரசியலுக்கு வந்து விட்டனர். சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்து குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழடைந்த நடிகை ஷகீலா தற்போது அரசியலில் அடி எடுத்து வைத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்துள்ளார். கட்சியில் இணைந்த உடனேயே அவருக்கு மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அரசியலில் இணைந்தது பற்றியும் அடுத்த கட்ட நடவடிக்கைகள், தனது அரசியல் பயணம் பற்றியும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார் நடிகை ஷகீலா.

அரசியலுக்கு வந்தது ஏன்
பெண்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன். நடிகை என்பதை தாண்டி ஒரு தனி அடையாளம், தனி அதிகாரம் பெற விரும்புகிறேன். நல்லது செய்ய வேண்டும் என்றாலும் கூட ஒரு 'பவர்' வேண்டும்.

குஷ்பு ரொம்ப சீனியர்
நிச்சயமாக எனது தேவைக்காக மட்டுமே அரசியலுக்கு வரவில்லை. காங்கிரசில் இருந்து குஷ்பு விலகியதால், அந்த இடத்தை நிரப்புவதற்காக நான் வந்துள்ளேனா? என்று கேட்கிறார்கள். நிச்சயமாக இல்லை. குஷ்புவுடன் என்னை ஒப்பிட வேண்டாம். எனக்கு அவர் சீனியர். காங்கிரசில் நான் இணைந்தது போல, இந்த கட்சியில் இருந்து அவர் விலகிச் சென்றதற்கும் ஒரு காரணம் இருக்கும் என்றார் ஷகீலா.

கடுமையான தண்டனை
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது என்று கூறிய ஷகீலா, பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்.

அரசியலும் சினிமாவும்
கட்சித் தலைமை அனுமதி அளிக்கும் பட்சத்தில் நிச்சயம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். அரசியல் ஒருபுறம் இருந்தாலும் எனது சினிமா பயணம் தொடரும் என்றும் ஷகீலா கூறியுள்ளார்.

இனிதான் அதிரடி
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளீர்கள். உங்களது அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும்? தேர்தல் களத்தில் மற்ற கட்சிகளை அதிரடியாக விமர்சித்து பேசுவீர்களா?', என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஷகீலா, ஏன் இத்தனை கேள்வி. இப்போதான் அரசியலுக்கு வந்திருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா பல விஷயங்களை கத்துக்கிட்டு இருக்கேன். இனி என் ஆட்டத்தை போகப்போக பார்ப்பீங்க என்று கூறியுள்ளார். ஷகீலாவின் அதிரடி அரசியல் ஆட்டத்தை பார்க்க தமிழக மக்கள் வெயிட்டிங்.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications