எலே 90'ஸ் கிட்ஸ் நம்ம சக்திமான் திரும்ப வந்துட்டாரு.. பண்டிகைய கொண்டாடுங்கலே! முகேஷ் கண்ணா தான் ஹீரோ
சென்னை: 90 காலகட்டங்களில் அப்போதைய குழந்தைப் பருவத்தினரை வெகுவாகக் கவர்ந்த சக்திமான் மீண்டும் வருகிறார். இதனை முகேஷ் கண்ணாவே அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ள நிலையில், உற்சாகமடைந்துள்ளனர் 90'ஸ் கிட்ஸ். அவர் கொடுத்துள்ள அப்டேட் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்..
இப்போது பேட்மேன், ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் என பல சூப்பர் ஹீரோக்கள் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் முதல் சூப்பர் மேன் என்றால் அது சக்திமான் தான். 1990 காலகட்டங்களில் மிகவும் பிரபலமாக இருந்தது சக்திமான் சீரியல்.

முகேஷ் கண்ணா நடித்திருந்த அந்த பாத்திரம் பலரையும் தூங்க விடாமல் செய்தது. ஞாயிற்றுக்கிழமை என்றாலே சக்திமானோடு தான் தொடங்கும். இருள் நீடிக்கிறது என வில்லன் என்ட்ரி கொடுக்க அவனை அழிப்பதற்காக யோகிகளும் சித்தர்களும் சேர்ந்து நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என ஐந்து பூதங்களையும் சேர்ந்து உருவாக்கியவர் தான் சக்திமான்.
சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அந்த சீரியலை கொண்டாடி தீர்த்தனர். அதற்குப் பிறகு ஆயிரம் சூப்பர் ஹீரோ கதைகள் வந்தால் சக்திமானுக்கு நிகர் சக்திமான் தான். பார்லே ஜி பிஸ்கட்டுடன் வரும் சக்திமான் ஸ்டிக்கரை ஒட்டாத வீடுகளும் கதவுகளும் பீரோக்களும் கிடையாது. அந்த அளவுக்கு சக்திமான் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. 1997ஆம் ஆண்டு ஒளிபரப்பான சக்திமான் தொடர்ந்து 8 ஆண்டுகள் 450-க்கும் மேற்பட்ட வாரங்கள் ஒளிபரப்பானது.
தொடர்ந்து எட்டு ஆண்டுகள் சக்திமான் ஆதிக்கம் தான் தூர்தர்ஷனில் இருந்தது. அதற்கு பிறகு முகேஷ் கண்ணா ஆரியமான் என்ற தொடரை எடுத்தாலும் சக்திமான் அளவுக்கு இல்லை. அதற்குப் பிறகு அவரும் அதிக அளவில் தலை காட்ட வில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் சக்திமான் வர இருக்கிறார். அது தொடர்பான அறிவிப்பை முகேஷ் கண்ணாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
"சக்திமான் திரும்ப வர இருக்கும் நேரம் இது. நமது இந்தியாவின் முதல் சூப்பர் டீச்சர், சூப்பர் ஹீரோ. ஆம்.. குழந்தைகளுக்கு இன்று இருளும் தீமையும் மேலோங்கி வருவதால் சக்திமான் திரும்புவதற்கான நேரம் இது. மீண்டும் ஒரு செய்தியுடன் போதனையுடன் அவர் திரும்புகிறார். இன்றைய தலைமுறையினருக்காக இரு கைகளால் அவரை வரவேற்கிறோம். டீசரை பாருங்கள்" என அந்த டீசர் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
அதில் வீடியோவில் ஒரு பள்ளிக்கூடத்திற்குள் தனது வழக்கமான ஸ்டைலில் சுற்றுச்சூழன்று வரும் சக்திமான் சுதந்திர போராட்ட தியாகிகள் பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரை பார்த்து பாடுகிறார். தற்போது இந்த டீசர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதனால் 90ஸ் கிட்ஸ் கொண்டாடி வருகின்ற மீண்டும் எங்கள் சூப்பர் ஹீரோ, ஹீரோவை பார்க்க ஆர்வத்தோடு இருக்கிறோம், எங்களது சிறுவயது நினைவுகள் மீண்டும் வருகிறது, பவர்ஃபுல்லான சூப்பர் ஹீரோ என கமெண்ட் செய்து வருகின்றனர் 90'ஸ் கிட்ஸ்கள்.
தற்போது சூப்பர் ஹீரோ சக்திமான் குறித்த அறிவிப்பு மட்டுமே வந்திருக்கும் நிலையில் அது திரைப்படமாக வருகிறதா அல்லது தொலைக்காட்சியில் வருகிறதா அல்லது ஓடிடியில் வெப் சீரிஸ் ஆக வருகிறதா? அதில் யார் யார் நடித்திருக்கிறார்கள்? என்பது குறித்த தகவல்களை தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் மூன்று பாகங்களாக திரைப்படமாகவோ அல்லது ஓடிடியில் வெப்சீரிஸாகவோ இது வரலாம் என கூறப்படுகிறது. எது எப்படியோ இந்தியாவில் முதல் சூப்பர் ஹீரோவை வரவேற்க அனைவரும் தயாராகி வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications