இலங்கை ஆர்மிகிட்டயே குண்டு போடாதீங்கன்னு சொல்லிட்டு வந்தேன்... அம்மாடியோவ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஞாயிற்று கிழமைகளில் சூப்பர் சிஸ்டர்ஸ்னு ஒரு ரியாலிட்டி ஷோ பண்றாங்க. சன் டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் சகோதரி, அல்லது சகோதரர் சேர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கலாம்.

ரோஜா சீரியலில் வில்லி வேடம் ஏற்று அனுவா நடிக்கும் ஷாம்லி, தனது சகோதரி ஷைலஜாவுடன் வந்திருந்தார்.அப்போது பேசிய அவர் நாங்க சின்ன வயசிலேயே இலங்கைக்கு போயிட்டோம்.

Shamily and her experience with Lankan army

போனப்பவே அங்க கலவரம்தான். எங்க ரெண்டு பேரையும் கட்டிலுக்கு கீழ படுக்க வச்சிருவாங்க .அம்மா பெட்டு மேல படுத்துக்குவாங்க. ஏன்னா அங்க புல்லட் மேலதான் பாயும்.

ராத்திரி எல்லாம் சத்தம் கேட்கும்..பக்கத்து வீட்டு சுவரில் நாங்க புல்லட் எடுத்து பார்ப்போம். எங்க ஸ்கூல் கேம்பஸ் உள்ளதான் ஆர்மி கேம்பஸ். அவங்ககிட்ட போயி, அங்கிள் நாங்க எங்க ஊரில் தீபாவளிக்குத்தான் பட்டாசு வெடிப்போம். நீங்க தினம் வெடிக்கறீங்க...

Shamily and her experience with Lankan army

எங்களுக்கு எல்லாம் ரொம்ப பயமாருக்கு.. இனிமே அப்படி செய்யாதீங்கன்னு சொல்லிட்டு வந்தேன்னு சொன்னார். அம்மாவுக்கு நான் நடிக்கறது பிடிக்கலை..அதனால, ரொம்ப கண்டுக்க மாட்டாங்க.

அம்மா.. அக்கா காலையில ஆஃபீஸுக்கு போகணும்னு நீங்களும் காலையில எழும்பி சமைச்சு குடுப்பீங்க.ஒரு நாளாவது எனக்கு என்ன வேணும், எங்க சாப்பிடுவேன்னு நீங்க என்கிட்டே கேட்டதே இல்லைன்னு சொல்லி அழுதார் ஷாம்லி.

Shamily and her experience with Lankan army

பிறகு ,எனக்கு நதியா மேடம் ரொம்ப பிடிக்கும். ரோஜா சீரியலில் முதல் காட்சியே நதியா மேடம்க்கு என்னோடதான். வீட்டுல வந்து ஆசையா சொன்னேன்.. சீக்கிரமே வீட்டுக்கு போயி டிவி பார்க்க உட்கார்ந்துட்டேன். அம்மா எழுந்து உள்ள போயிட்டாங்க.

எனக்கு ஹேர்டிங்கா இருந்துச்சு... அவ நல்லா நடிச்சுருக்கா,இவ நல்லா நடிச்சுருக்கான்னு சொல்லுவாங்க. ஆனா,நான் நல்லா நடிச்சு இருக்கேன்னு ஒரு தடவை கூட சொன்னதில்லை.

Shamily and her experience with Lankan army

நீ எப்போ இந்த ஃபீல்டை விட்டு வருவியோ அப்போதான் நான் நிம்மதியா இருப்பேன்னு சொல்லுவாங்க. நான் கேட்காம நடிச்சுட்டு இருக்கேன். இப்போதைக்கு நடி.. ஆனா, தொட்டு நடிக்காதேன்னு சொல்லி இருக்காங்க.

அதனால்தான் வில்லி கேரக்டர்ல நான் நடிக்கறேன்.. அம்மா நீங்க சொன்தை நான் செய்துகிட்டு இருக்கேன்.. வீட்டுல பார்சியாலிட்டி பார்க்காதீங்க அம்மான்னு சொல்லி அழுதார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+