Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷார்ஜாவில் விபன்சிகா நினைவிருக்கா? ஆந்திராவிலும் அத்துமீறிய மாமியார்.. கடைசியாக மருமகள் தந்த பரிசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருப்பு நிறம் காரணமாக எத்தனையோ இளம் பெண்கள் இன்னும் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர்... கிராமங்களிலும் சரி, நகர்ப்புறங்களிலும் சரி, இந்த பாகுபாடு காணப்படுகிறது.. தோற்றம், நிறம் காரணமாக அவர்களை ஒதுக்குவதும், டார்ச்சர்களை தருவதும் மோசமான விளைவுகளுக்கு அப்பெண்களை இட்டுச் செல்கிறது. அந்தவகையில், ஆந்திர பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது நடந்துள்ளது.

ஷார்ஜாவில் வரதட்சணை கொடுமையால் கேரள இளம்பெண் விபின்சிகாவை யாராலும் எளிதில் மறக்க முடியாது.. தந்தையை இழந்த விபின்சிகாவுக்கு, அளவுக்கு அதிகமான நகைகள், பணத்தை வரதட்சணையாக தந்து, நிதிஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள்..

Dowry Dark Skin colour Discrimination

ஷார்ஜாவில் வேலைபார்க்கும் நிதிஷூடன் குடும்பம் நடத்த சென்ற விபின்சிகா, கணவரின் வரதட்சணை கொடுமைக்கு ஆளானார்.. மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கப்பட்டார்..

விபன்சிகா பார்ப்பதற்கு அழகாக இருப்பாராம்.. ஆனால், நிதிஷ் உள்ளிட்டோர் கருப்பாக இருப்பார்களாம்.. இதனால் விபன்சிகாவை பார்த்தாலே எரிச்சல் வந்துள்ளது.. "நாங்கள் எல்லாம் கறுப்பா இருக்கும்போது, நீ மட்டும் எப்படி சிகப்பாய் இருக்கலாம்" என்று சொல்லி சொல்லியே விபன்சிகாவை அடித்து காயப்படுத்தினார்களாம்..

தலைமுடி அழகு

தலைமுடியும் விபன்சிகாவுக்கு அழகாக இருக்குமாம்.. எனவே, அவரது தலைமுடியை வெட்டியிருக்கிறார்கள்.. அப்போதும் விபன்சிகா அழகாக இருந்தாராம். அதனால் அவருக்கு மொட்டையே அடித்துள்ளார்கள்...போதாக்குறைக்கு கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பும் இருந்துள்ளது. தன்னுடைய படுக்கையிலேயே, அந்த கள்ளக்காதலியையும் அழைத்து உறவு தன் கண் முன்னேயே கொண்டாராம் சதீஷ்..

கடைசியில் 2 மாதங்களுக்கு முன்பு, தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை தலையணையால் அமுக்கி கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார் விபின்சிகா. இது தொடர்பான விசாரணைகள் தற்போதும் நடந்து வருகிறது என்றாலும், சதீஷூம், அவரது குடும்பத்தினரும் கருப்பாக இருப்பதுதான், விபின்சிகா மீதான வன்மத்தை கொட்ட முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.

கோபிலட்சுமி - மாமியார்

அந்த வகையில் இதோ இன்னொரு சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.. கருப்பு நிறமாக இருப்பதால் தன்னுடைய மருமகளை மாமியார் வீட்டை விட்டே துரத்தி அடித்துள்ளார்..

ஆந்திராவின் வினுகொண்டா மண்டலத்தில் உள்ள நடுகட்டாவை சேர்ந்தவர் கோபிலட்சுமி.. அதே பகுதியில் வசிக்கும் கோடீஸ்வரராவ் என்பவருடன் இவருக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்துள்ளது.. ஆரம்பத்தில் இல்லற வாழ்க்கை நல்லதாக தோன்றினாலும், திருமணத்திற்கு 3 மாதங்களுக்கு பிறகு கோபிலட்சுமிக்கு எதிராக சோகமான சம்பவங்கள் அந்த வீட்டில் நடக்க தொடங்கியது.

கருப்பு நிற மருமகள்

கோபிலட்சுமி கருப்பு நிறமாக இருப்பாராம்.. இந்த கருப்பு தோற்றத்தை அவரது கணவர் கோடீஸ்வரராவ் விரும்பவில்லை.. கோபிலட்சுமியை வெறுக்க துவங்கினார்.. மாமனார் மற்றும் மாமியார் கூட கோபிலட்சுமியை துன்புறுத்த துவங்கி உள்ளனர்.

இந்த நிற பிரச்சனை, வரதட்சணை பிரச்சனையாகவும் மாறியது.. திருமணத்தின்போது கோபிலட்சுமியின் குடும்பத்தினர் 25 பவுன் தங்க நகைகள், ரூ.12 லட்சம் வரதட்சணையாக கொடுத்திருந்தனர். ஆனால், பெண் கருப்பாக இருப்பதால் கூடுதல் வரதட்சணை வேண்டும் என்று கேட்டார்களாம்.. ஒரு கட்டத்தில் மாமியார், கோபிலட்சுமியை வீட்டிலிருந்து வெளியே அடித்து துரத்திவிட்டாராம்..

பயந்து ஓடிய மாமியார், கணவர்

நாளுக்கு நாள் தன்னை கொடுமைப்படுத்துவதை தாங்கி கொள்ள முடியாத கோபிலட்சுமி, வீட்டிலிருந்தே தன்னை விரட்டியதுமே கொந்தளித்து போனார்.. தனது கணவர் வீட்டிற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினார். இதைப்பார்த்த , கணவர், மாமனார், மாமியார் மூன்று பேருமே வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூர் போய்விட்டார்களாம்..

இதையடுத்து, கோபிலட்சுமி போலீசுக்கு சென்று புகார் தந்தார்.. இந்த புகாரின் பேரில், போலீசார் அவரது கணவர் உட்பட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பும், மரியாதையும்

கோபிலட்சுமியின் மன உறுதியும், டார்ச்சருக்கு எதிரான அவர் மேற்கொண்ட போராட்டமும் பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.. அத்துடன் கோபிலட்சுமிக்கு ஆதரவும், நம்பிக்கையும் சோஷியல் மீடியாவில் குவிந்தபடி உள்ளது...

குடும்ப உறவுகள், பணத்திற்கான எதிர்ப்புகள், தோற்றத்தின் காரணமாக ஏற்பட்ட பிரச்சினைகள் அப்பாவிகளான விபன்சிகா, கோபிலட்சுமி போன்று ஏராளமான பெண்கள் இன்னமும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.. இந்த சமுதாயத்தில் பெண்களுக்கு பாதுகாப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்பதைத்தான் மீண்டும் நாம் இங்கு வலியுறுத்தி சொல்ல வேண்டியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+