பெட்ரூமில்.. தம்மாதுண்டு கவுன் போட்டுக்கிட்டு.. ஷிவானி முகமெல்லாம் வெட்கம் மலர.. திணறும் ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் ஷிவானி - பாலாஜி ரொமான்ஸ் நேற்றும் நடந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடை தெரியுமளவுக்கு குட்டை ஸ்கர்ட் அணிந்து கொண்டு, பெட்ரூமில் உட்கார்ந்திருந்த ஷிவானி வீடியோதான் இணையத்தில் அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்!

இதுவரை நடந்த எபிசோட்களிலேயே நேற்றுதான் பிக்பாஸ் நிகழ்ச்சி மொக்கையோ மொக்கையாக இருந்தது.. இதற்கு முந்தைய சீசன்களில் தரப்படும் டாஸ்க்குகள் வித்தியாசமாக இருக்கும்.. தனிமனித திறமைகளை வளர்ப்பதுபோலவும், இருக்கிற திறமைகளை வெளிப்படுத்துவது போலவும் இருக்கும்.

Shivani and Balas romantic scene in house: Bigg Boss 4

பொதுஅறிவு விஷயங்கள் புலப்படும்.. ஆனால், இந்த முறை சொல்லும்படியாக எந்த டாஸ்க்கும் பெரிதாக இல்லை.. அதிலும் நேற்று விறுவிறுப்பு இல்லாமல் நகர்ந்தது .. சுண்டல் விற்பது என்று ஆரம்பித்து, ரேடியோ ஜேக்கி என்று டாஸ்க் தரப்பட்டது.. இதில் அர்ச்சனா மட்டும் சிறப்பாக செய்தார்.

அவருக்கு பிடித்த தொகுப்பாளர் வேலை என்பதாலோ என்னவோ, இயல்பாக இருந்தது. அர்ச்சனா கடகடவென பேசுவது, நடுநடுவே பஞ்ச் வைப்பது, சக போட்டியாளர்களை லைட்டாக இடித்துரைப்பது என அனைத்துமே சூப்பர்... அதேபோல, நிஷா எடுத்து வைத்த பாயின்ட்கள் அருமை

சுரேஷ் இன்னும் எத்தனை நாளைக்கு அர்ச்சனா & கோ மீது கோபமாக இருப்பார் என்று தெரியவில்லை.. நிஷா கையால லெமன் ரைஸ் சாப்பிட்டார்.. மதியானம் வெறும் சோத்தை தண்ணி ஊத்தி சாப்பிட்டு போனார்.. இதில் நேற்றைய கவனம் மொத்தம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி போட்டியாளர்களும் திரும்பியது பாலா - ஷிவானி பக்கம்தான்.

யார் எக்கேடு கெட்டாலும் சரி.. யார் என்ன சொன்னாலும் சரி.. வீடே பற்றிக் கொண்ட எரிந்தாலும் சரி, ஷிவானி - பாலா ரொமான்ஸ் நிற்பதில்லை.. நேற்றும் ரொமான்ஸ் நேரம் தொடங்கியது.. கட்டிலில் பாலா படுத்து கொண்டிருக்க, வழக்கம்போல பக்கத்தில் உட்கார்ந்திருந்தார் ஷிவானி.. குட்டை கவுன் அணிந்து கொண்டு, வெட்கம் மலர ஏதோ பேசி கொண்டிருந்தார்.

அதை வெளியே சக போட்டியாளர்கள் மன்மதராசா, லூசு பெண்ணே பாட்டெல்லாம் பாடி கிண்டல் செய்தனர். இவர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை.. இது நிஜமாகவே லவ்வா? அல்லது கண்டன்ட் தந்து கொண்டிருக்கிறார்களா என்று நமக்குதான் மண்டை காய்ந்து விடுகிறது.. அதற்கேற்றார்போல தினமும் புரொமோவில் ஷிவானி - பாலா ஏதாவது ஒரு ரொமான்சுடன் வந்துவிடுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+