கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரே நேரத்தில் எல்லா பேருந்துகளையும் இயக்க முடியாது -சிவ்தாஸ் மீனா
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரே நேரத்தில் எல்லா பேருந்துகளையும் இயக்க முடியாது என்றும் அதற்கான காரணங்கள் குறித்தும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
பொங்கலுக்கு பிறகு, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ஆம்னிப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது பற்றி தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களிடம் கூறியதாவது;

''பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்து முனையம் திறக்கப்பட்ட நாளிலிருந்து படிப்படியாக பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஒரே சமயத்தில் அனைத்து பேருந்துகளும் இயக்க முடியாது. அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகள் (SETC) இம்முனையத்திலிருந்து இயங்கி கொண்டு வருகிறது. ''
''பொங்கலுக்கு பிறகு, இம்முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு ஆம்னிப் பேருந்துகள் (Omni Buses) 24.01.2024 முதல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்பொழுது சென்னை மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்துகள் (MTC) போதுமான அளவு தேவைக்கேற்ப இயக்கப்பட்டு வருகிறது. இம்முனையத்தில் இருந்து பயணிகளின் தேவைக்கேற்ப இன்று மட்டும் சுமார் 4000 நடைகள் (Trips) சென்னை மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டன. ''
''இம்முனையத்தில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் சீரான நிலையில் இயக்குவதற்கும் மற்றும் பொது மக்களுக்கு எந்த ஒரு குழப்பம் இல்லாமல் படிப்படியாக அனைத்து பேருந்துச் சேவைகளும் தொடர்வதற்கும் இக்கூட்டம் நடைபெற்றது. இம்முனையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டிற்கும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, பயணிகள் உதவி மையம், பயணிகளை ஏற்றி செல்லும் மின்கல ஊர்திகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக மின்கல ஊர்தி (Battery Vehicle for Differently-abled Persons), பயணிகள் பிரதான முனையத்திலிருந்து சென்னை மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்து முனையத்திற்கு சுலபமாக வருவதற்கு மாற்று பாதை (MTC Plaza) அமைக்கப்படுவது மற்றும் உணவகங்கள் போதுமான அளவில் உள்ளனவா என இன்று ஆய்வு செய்யப்பட்டது. ''
''மேலும் பயணிகளிடம் விசாரித்த போது, இம்முனையத்தில் தேவையான அனைத்து வசதிகள் உள்ளது எனவும் தெரிவித்தனர். குறிப்பாக பயணிகளுக்கு ஆங்காங்கே பேருந்து வழித்தட நடைமேடை பலகை (Platform Destination Boards) போதுமான அளவில் வைக்க தெரிவித்தனார். மேலும் இம்முனையத்தில் பயணிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை (Digital Signage Boards) வைப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பேருந்து முனையத்தை "பிளாஸ்டிக்-இல்லா முனையமாக" (Plastic-free Zone) செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.''
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications