விஜய் கட்சி கொடி அறிமுக விழாவில் தந்தை, தாய் பங்கேற்பு.. மனைவி, மகன் ஆப்சென்ட்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவில் கட்சித் தலைவர் விஜய்யின் தாய் ஷோபா, தந்தை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு 300 பேர் மட்டுமே பனையூர் அலுவலகத்தில் கலந்து கொண்டனர். மற்றவர்கள் எல்லாம் வீடியோ கான்பிரன்ஸில் கலந்து கொண்டனர்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. தனது கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என விஜய் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கட்சியை எப்போது தொடங்குவார், என்ன பெயர் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் கட்சியின் பெயர் தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால் கட்சியின் கொடி என்ன என தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் கட்சிக் கொடியையும் நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார்.
இந்த விழாவுக்காக நடிகர் விஜய் தனது நீலாங்கரை வீட்டிலிருந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை புஸ்ஸி ஆனந்து வரவேற்றார். இந்த விழாவில் கட்சியின் பொருளாளர், கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விஜய்யின் கொடி அறிமுக விழாவிற்கு அவருடைய தாய் ஷோபாவும், தந்தை சந்திரசேகரும் வருகை தந்தனர். இதையடுத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆனால் விஜய் மனைவி சங்கீதா, விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஆகியோர் விழாவிற்கு வராதது பலரது புருவங்களை உயர்த்தியது.
பெற்றோரும், புஸ்ஸி ஆனந்தும் இருப்பதை உறுதி செய்த பின்னர் விஜய் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். அதில் சிவப்பு , மஞ்சள் நிறத்தில் கொடியிருந்தது. நடுவே வெற்றிக்கு அடையாளமான வாகை மலரும், இரு போர் யானைகளும் இருந்தன.
இந்த கொடியை பனையூர் கட்சி அலுவலகத்திலும் அவர் ஏற்றி வைத்தார். இதை தவெக நிர்வாகிகள் கைதட்டி வரவேற்றார். பிறகு கொடி பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications