நயன்தாரா திடீர் வார்னிங்.. சிம்புவுக்கும் அதே மாதிரி நடந்துருச்சே..சொல்லி வச்சது போல் ஒரே நேரத்தில்?
சென்னை : அட்மின் நடத்தி வரும் தனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நயன்தாரா பதிவிட்டுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் நடிகர் சிம்புவின் எக்ஸ் பக்கமும் ஹேக் செய்யப்பட்டது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம்..
தமிழில் அய்யா படத்தின் மூலம் அறிமுகமாகி, ரஜினிகாந்த், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்த நயன்தாரா தற்போது வரை தமிழின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருவதோடு, லோடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

தொடர்ந்து சில காதல் விவகாரங்களுக்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவருமே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதனால் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், முக்கிய நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சொல்லப்போனால் தமிழகம் முழுவதுமே நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த பேச்சுகள் தான் எங்கு பார்த்தாலும் நிறைந்திருந்தது.
அதே நேரத்தில் அப்போதிலிருந்தே சில சர்ச்சைகளும் நயன் - விக்கி தம்பதியை சுற்றிச் சுழன்றாலும் அதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் உலக டூர் சென்ற தம்பதி பின்னர் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இருந்த தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர். அந்த விவகாரமும் சில சர்ச்சைகளை சந்தித்தது. தொடர்ந்து அதனை கண்டுகொள்ளாமல் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் நயன்தாரா.
நடிப்பு மட்டுமல்லாமல், பிசினஸிலும் களமிறங்கியிருக்கும் நயன், தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தனது கம்பெனி தயாரிப்புகளை புரோமோட் செய்து வருகிறார். மேலும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவருக்கு எக்ஸ் தலத்தில் சொந்தமாக அக்கவுண்ட் இல்லை அவரது திரைப்படங்கள் மற்றும் சில தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அடிக்கடி எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் வரும்.
நயன்தாரா சார்பாக இன்னொருவர் பதிவிட்டு வருகிறார் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சுமார் 33 லட்சம் ஃபாலோயர்களைக் கொண்ட அந்த கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பக்கத்தில் வெளியாகும் தேவையற்ற பதிவுகளை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் நடிகர் சிலம்பரசனின் எக்ஸ் பக்கமும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பக்கத்தில் ”கிரிப்டோ கரன்சியை பயன்படுத்த விருப்பமா? இதுதொடர்பாக அறிவிப்பு விரைவில் வரும்” என சிம்பு பதிவிட்டு இருப்பது போல x பதிவு வந்தது. இதன் காரணமாக சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் அந்த பதிவு சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. இந்த நிலையில் தனது பக்கம் ஹேக் செய்யப்பட்டது குறித்து சிம்பு தரப்பு எந்த வித விளக்கத்தையும் தரவில்லை. ஒரே நேரத்தில் நடிகர் சிம்பு, நயன்தாராவின் எக்ஸ் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications