சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிரஸ்ஸே இல்லாமல்.. தலைமுடி அறுக்கப்பட்டு.. பீச்சில் மிதந்த ரூபஸ்ரீ.. 2020ஐ அதிர வைத்த கேரள கொலை

கேரளா ஆசிரியை ரூபஸ்ரீ கொலை சம்பவமானது இந்த வருடம் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒன்றாகும்

Google Oneindia Tamil News

சென்னை: உடம்பெல்லாம் காயங்கள், டிரஸ்ஸே இல்லாமல்.. தலைமுடி அறுக்கப்பட்ட நிலையில் ஒரு டீச்சர் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த வருடம் கேரளாவையே உலுக்கி எடுத்துவிட்டது!

சென்ற வருடம் மட்டன் சூப் ஜோலியை போலவே, இந்த வருடம் கேரள மாநிலத்தில் நடந்த 2 மிக முக்கியமான கொலைகளில் ஒன்று பாம்பை ஏவி உத்ரா என்ற இளம்பெண்ணை கொன்ற சம்பவம், மற்றொன்று பண தகராறு காரணமாக பள்ளி ஆசிரியை ரூபஸ்ரீ என்பவரை கொலை செய்த சம்பவம்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மஞ்சேஸ்வரம் பகுதியை சேர்ந்த தம்பதிதான் சந்திரசேகரன் - ரூபஸ்ரீ. சந்திரசேகரன் ஒரு பேங்கில் வேலை பார்க்கிறார். ரூபஸ்ரீ ஒரு பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்தார்.. வயது 44 ஆகிறது.. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ரூபஸ்ரீ வழக்கமாக ஸ்கூலுக்கு டூவீலரில்தான் செல்வார்.

ரூபஸ்ரீ

ரூபஸ்ரீ

அப்படித்தான், கடந்த ஜனவரி 16-ந் தேதியும் ஸ்கூலுக்கு சென்றவர் வீட்டுக்கு திரும்பவில்லை.. இதனால் கணவரும், உறவினர்களும் ரூபஸ்ரீயை எங்கெங்கோ சென்று தேடியும் கிடைக்கவில்லை.. இந்நிலையில்தான், மஞ்சேஸ்வரம் பீச்சில் ரூபஸ்ரீ பிணமாக கிடந்தார். சடலம் பக்கத்திலேயே ரூபஸ்ரீயின் டூவீலரும் விழுந்து கிடந்தது. அவரது தலைமுடி அறுக்கப்பட்டு இருந்தது. உடம்பெல்லாம் பல காயங்கள் இருந்தன.. ரூபஸ்ரீயை கடத்தி, அளவுக்கு அதிகமாக சித்ரவதை செய்து யாரோ கொன்றிருக்கிறார்கள் என்று மட்டும் தெரிந்தது.

சடலம்

சடலம்

பீச்சில் மிதந்த சடலத்தை பார்த்த மீனவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள். விரைந்து வந்த போலீசார் ரூபஸ்ரீ சடலத்தை மீட்டனர். உடம்பெல்லாம் அழுகி கிடந்தது... எதற்காக தலைமுடியை அறுத்திருந்தனர்... பலாத்காரம் செய்து கொன்றார்களா என்று தெரியாமல் போலீசார் இந்த விசாரணையை ஆரம்பித்தனர். ஆனால் எந்தவித க்ளூவும் இதில் உடனடியாக கிடைக்கவில்லை. எப்போதுமே ரூபஸ்ரீயிடம் 2 செல்போன்கள் இருக்குமாம். அதில் ஒரு செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

செல்போன்

செல்போன்

இன்னொரு செல்போனை தொடர்பு கொண்டபோது, ரிங் மட்டும் போய் கொண்டே இருந்தது.. அந்த செல்போன் ரூபஸ்ரீயின் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் செல்போன் டவர் காட்டவும், இதனை வைத்து கொலையாளியை தேடும் முயற்சியில் போலீசார் இறங்கினர். இதுதான் போலீசாருக்கு முதல் க்ளூவாக இருந்தது. இந்த சமயத்தில்தான் ரூபஸ்ரீ பள்ளியில் வேலை பார்க்கும் டிராயிங் மாஸ்டர் வெங்கட்ரமணா மீது சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவிக்கவும், போலீசார் அந்த டிராயிங் மாஸ்டரை பிடித்து விசாரித்தனர்.. இறுதியில் அவர்தான் கொலையாளி என்றும் முடிவானது.

 தகராறு

தகராறு

ஒரே பள்ளி என்பதால், ரூபஸ்ரீக்கும் வெங்கட்ரமணாவுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது.. லோன் எடுத்தது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.. சம்பவத்தன்றும் அப்படித்தான் பணம் சம்பந்தமாக தகராறு ஏற்படவும், ஆத்திரத்தில், ரூபஸ்ரீயை பக்கெட்டில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து கொன்றுள்ளார் வெங்கட்ரமணா.. அதன்பிறகு சடலத்தை காரில் கொண்டு சென்று கடலில் வீசியுள்ளார் என்பதும் தெரியவந்தது.

 காயங்கள்

காயங்கள்

அவரது கார் டிக்கியில் ரூபஸ்ரீயின் தலைமுடிகள் இருந்தனவாம்.. ஆனால், ரூபஸ்ரீ உடம்பெல்லாம் காயங்கள் எப்படி வந்தன? டிரஸ் இன்றி சடலம் கிடந்தது எப்படி? தலைமுடியை ஏன் வெட்டினார்? என்ற கேள்விகளுக்கு விடையே சரியாக கிடைக்கவில்லை.. இப்படி ஒரு பயங்கரமான கொலை இந்த வருடம் கேரளத்தையே உலுக்கிவிட்டது.

English summary
Shocking Crime News 2020: Kerala Drawing master arrested for school teacher murder case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X