சூட்கேஸ் கொலை! பெண்ணை வெட்டி தம் பிரியாணி போட்டது ஏன்? கூடுவாஞ்சேரி காதல் ஜோடி வழக்கில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் பெண் கொல்லப்பட்டு ஆக்ரா ரயிலில் சூட்கேஸில் சடலம் வைக்கப்பட்ட சம்பவத்தில் பல்வேறு திடுக் தகவல்கள் கிடைத்துள்ளன.

சென்னையிலிருந்து உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 5ஆம் தேதி ஒரு பொதுப் பெட்டியில் கடும் துர்நாற்றத்துடன் கூடிய சிவப்பு நிற சூட்கேஸ் இருந்தது.

guduvanchery

அதுகுறித்து அங்கிருந்த பயணிகல் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அந்த பெட்டியை திறந்து பார்த்ததும் அதில் மனித உடல் பாகங்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெட்டியில் இருந்த அடையாளத்தை வைத்து அது சென்னையில் இருந்து வந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். இதையடுத்து தமிழக போலீஸாரின் உதவியுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது கண்ணாடி அணிந்த ஒரு பெண்ணும், ஒரு ஆணும் அந்த பெட்டியை ஆக்ரா செல்லும் ரயிலில் வைத்துவிட்டு இருவரும் கூடுவாஞ்சேரிக்கு செல்லும் மின்சார ரயிலில் பயணம் செய்தனர். இந்த நிலையில் இந்த காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் செய்திகளில் வந்ததை அடுத்து கூடுவாஞ்சேரியை சேர்ந்த ஒரு பெண், அந்த கண்ணாடி பெண்ணை தங்கள் ஏரியாவில் பார்த்திருப்பதாக தெரிவித்தாராம்.

இதையடுத்து அந்த பெண் சொன்ன அடையாளங்களை வைத்து போலீஸார் மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றனர். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸார் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்த போது அங்குள்ள சமையல் அறையில் ஒரு தம் போடப்பட்ட பிரியாணி அண்டா இருந்தது.

அந்த அறை முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து மைதா மாவு போட்டு தம் போடப்பட்ட பிரியாணி அண்டாவை போலீஸார் திறந்து பார்த்த போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

அதில் அரிசி, காய்கறிகள், மசாலா பொருட்கள் சேர்த்து மனித உடல் பாகங்களும் சேர்த்து பிரியாணி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அந்த பிரியாணி அண்டாவை பறிமுதல் செய்தனர்.

அந்த சடலம் 38 வயது பெண்ணுடையது என்று தெரியவந்தது. அந்த பெண் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த ஹயதுன் நிஷா என தெரியவந்தது. அவர் தாம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இந்த பெண்ணின் மகன் தாம்பரத்தில் ஒரு மெக்கானிக் கடையில் பணிபுரிந்து வருகிறாராம். அவரிடம் விசாரணை நடத்தியதில், தனது தாயின் நடத்தை சரியில்லை என்பதால்தான் தனியே தங்கி வேலை செய்து வருவதாகவும் அவர் யாருடன் தங்கியிருந்தார் என்பது தனக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

பெண்ணின் உடல் பாகங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அவரது தலையை எங்கே வீசினர் என தெரியவில்லை. இந்த சம்பவத்தை தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் விசாரணையில் கண்ணாடி அணிந்த பெண்ணின் பெயர் பகபதி மாஜி என்றும் அந்த இளைஞர் அஸ்ஸாமை சேர்ந்த மாணிக் லஸ்கர் என்பதும் தெரியவந்தது. மேலும் இந்த ஜோடியுடன் நிஷாவும் தங்கியிருந்தாராம். எனவே இருவரும் சேர்ந்து நிஷாவை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இந்த இருவரும் காதலர்கள் என்றும் கடந்த ஆண்டு இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியதும் தெரியவந்தது. இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்தனராம். ஏற்கெனவே மாணிக் லஸ்கருக்கு பெருங்களத்தூர் பாரதி நகரில் வசித்து வந்த 38 வயதான ஹயதுன் நிஷா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

ஹயதுன் நிஷாவும் பகபதி, லஸ்கர் ஆகியோருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. மாணிக் லஸ்கரும் பகபதியும் காதலிப்பதை அறிந்த நிஷா தட்டி கேட்ட போது அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த கொலை கடந்த 2ஆம் தேதியே நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் இந்த காதல் ஜோடியை போலீஸார் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+