கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. திறக்கிற நேரம் பார்த்தா இப்படி நடக்கணும்! வெளியான ஷாக் தகவல்.. அடடா
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தீபாவளிக்கு முன் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த பேருந்து நிலையம் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
கடந்த சில வாரங்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. முன்பே திறக்கப்பட வேண்டிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த பேருந்து நிலையம் ரூ 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இது 2018-ம் ஆண்டே திறக்கப்படும் என முதலில் கூறப்பட்டது.

ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் இதன் திறப்பு விழா தள்ளிக்கொண்டே போகிறது. இந்த வருடம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த பேருந்து நிலையம் சுத்தமாக எந்த திட்டமிடலும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது.
இதனால் அங்கே மழைநீர் தேங்கும் அபாயம் இருந்தது. அதை எல்லாம் சரி செய்து இப்போது கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. முந்தைய ஆட்சியில் செய்த தவறுகளால் 25 சதவிகிதம் கூடுதலாக செலவு செய்து இந்த முறை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மூலம் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் முறையாக திட்டமிட்டு கட்டப்படவில்லை.
சென்னையில் இருந்து 30 கிமீ தூரத்தில் பேருந்து நிலையம் இருக்கிறது. இங்கே மெட்ரோ இல்லை. புறநகர் ரயில் இல்லை. இதனால் மக்கள் இங்கிருந்து சென்னைக்கு உள்ளே வருவது கடினமான வேலையாக இருக்கிறது. இங்கே பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்ட போதே அதை முறையாக திட்டமிடாமல் விட்டுவிட்டனர். அதன் காரணமாகவே தற்போது இங்கே மாற்றங்களை செய்து வருகின்றனர்.
இங்கே கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளை சரி செய்து மக்கள் பயன்படுத்தும் வகையில் எளிமையாக விஷயங்களை மாற்றி வருவதாக ஆளும் திமுக அரசும் தெரிவித்து உள்ளது. உள்ளே இரண்டு மாடி.. மக்கள் செல்ல நவீன நகரும் தரைத்தளம், அதுபோக எக்ஸ்லேட்டர் என்று பல சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளனர்.
இங்கே மழை நீர் வடிகால் அமைப்பு கட்டி வருகின்றனர். அதனால் 3 கட்டம்: இதனால் இந்த பேருந்து நிலையத்தை திறப்பது மேலும் 3 மாதங்கள் தாமதம் ஆகலாம் என்கிறார்கள். அதாவது அடுத்த மாதம் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் நவம்பர் இறுதியில் திறக்கப்படலாம். அல்லது தீபாவளிக்கு முன் திறக்க முயற்சிக்கலாம் என்கிறார்கள்.
கட்டுமானம்: இந்த பேருந்து நிலையத்தின் கட்டுமானம் குறித்த பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் நிலையில்தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தீபாவளிக்கு முன் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த பேருந்து நிலையம் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி இந்த பேருந்து நிலையம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றபடி கட்டப்படவில்லை என்று கூறப்பட்டு உள்ளது. அதாவது சாய்தளம் அமைத்தல், தாழ்வான ஏறுதலம் அமைத்தல் போன்று மாற்றுத்திறனாளிகள் எளிதாக செல்லும் விதமாக இந்த பேருந்து நிலையம் கட்டப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
இங்கே நடத்தப்பட்ட ஆய்வில் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில், கழிப்பறை என்று எங்குமே இதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இவ்வளவு பிரம்மாண்டமான பேருந்து நிலையத்தில் இந்த வசதி கூட செய்து கொடுக்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications