Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோழிங்கநல்லூருக்கு ஹேப்பி.. அடையாறு ஆற்றை வெற்றிகரமாக "கிராஸ்" செய்த "காவிரி".. நிமிருது நம்ம சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், அடையாறு ஆற்றின் கீழ் 56 அடி ஆழத்தில் நடைபெற்று வந்த 'காவிரி' இயந்திரத்தின் சுரங்கப் பாதை பணி அடையாறு ஆற்றை கடந்து வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

சென்னை மாநகரத்தை பொறுத்தவரை, 2வது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63.246 கோடி மதிப்பில், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

Sholinganallur Happy news and kaveri TBM Tunnels successfully crosses Adyar river says Chennai Metro Rail

அதாவது, மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம் (45.4 கி.மீ), கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4 -வது வழித்தடம் (26.1 கி.மீ.), மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடம் (44.6 கி.மீ.) என்று மொத்தம் வழிதடங்களில் பணிகள் நடக்கின்றன..

துரித வேகம்: இந்த பணிகள் அனைத்தும், உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பது என பல்வேறு தளங்களில் துரிதமாகி கொண்டிருக்கின்றன.

இந்த வழித்தடத்தில், பசுமை வழிச்சாலை பகுதியிலிருந்து அடையாறு சந்திப்பு வரையிலான 1.226 கி.மீ. தொலைவுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கியது.

காவிரி சுரங்கம்: அதாவது, காவிரி மற்றும் அடையாறு என 2 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் கிரீன்வேஸ் சாலை நிலையத்திலிருந்து அடையாறு சந்திப்பு நிலையம் வரை 1.226 கி.மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாயின.. இதில் காவிரி சுரங்கம் தோண்டும் இயந்திரம் 583 மீ. சுரங்கம் தோண்டும் பணியை முடித்தபோது, வெற்றிகரமாக அடையாறு ஆற்றில் நுழைந்து அடியில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது.

இதுகுறித்து அப்போது அதிகாரிகள் சொன்னபோது, "அடையாறு சுரங்கம் தோண்டும் இயந்திரம், 250 மீ. தொலைவில் நெருக்கமாக பிறகு தொடர்ந்து 20 நாட்களுக்குள் அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொள்ளும்...

மீண்டும் பணிகள்: இந்த 2 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களும் டிபி சாலைக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து, திருவிக பாலம் அருகே அடையாறு ஆற்றைக் கடந்து அடையாறு சந்திப்பு நிலையத்தை வந்தடையும்" என்று தெரிவித்திருந்தார்.

அதன்படியே, பணிகளும் துரிதமாக நடந்து, காவிரி என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம், அடையாறு ஆற்றுப்படுகையை கடந்த டிசம்பர் 30-ம் தேதி அடைந்தது... பின்னர், இந்த இயந்திரம், அடையாறு ஆற்றின் கீழ் 56 அடி ஆழத்தில் சுரங்கப்பாதை பணியை ஆரம்பித்தது.. இதில், தினமும் அதிகபட்சமாக 7 மீட்டர் வரை மட்டுமே சுரங்கம் தோண்டப்பட்டு வந்தது... தற்போது இந்த பணி முடிவடைந்துள்ளதாம்..

பணிகள் நிறைவு: காவிரி சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் சுரங்கப்பாதை பணிகள் அனைத்துமே அடையாறு ஆற்றின் கீழ் நிறைவடைந்துள்ளதாகவும், இந்த இயந்திரம் அடையாறு ஆற்றை வெற்றிகரமாக கடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சொல்லும்போது, "அடையாறு ஆற்றின் கீழ், தண்ணீர் அழுத்தம் போன்றவை எல்லாம் சவாலாக இருந்தன.. எனினும், பாறைகள் மென்மையாக இருந்ததால், தண்ணீர் அழுத்தத்தை பராமரித்து, சீரான வேகத்தில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் இயக்கப்பட்டது. இப்போது ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள், வரும் மே மாதத்துக்குள் அடையாறு சந்திப்பை அடைய திட்டமிடப்பட்டுள்ளது" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+