வீட்டுக்கடன் வட்டி குறைய வேண்டுமா? "மறந்தும்" இந்த தவறை செஞ்சுடாதீங்க - நேரடி அனுபவம்
சென்னை: வீட்டுக்கடன் வாங்கி புதிதாக வீடு வாங்கியவர்கள் அதன்பிறகு வட்டிய குறைய வேண்டும் என்று ஆசை இருந்தால் மறந்தும் சில தவறுகளை செய்ய வேண்டாம். இன்னும் தெளிவாக சொல்வது என்றால் தனிநபர் கடன்களை வாங்க வேண்டாம். அப்படி கடன் வாங்கினால் உங்கள் சிபில் ஏறிவிடும். இப்போது கரண்ட் சிபில் அடிப்படையில்தான் வட்டியை குறைக்கிறார்கள்.. எனவே வீட்டுக்கடன் வட்டி குறைய வேண்டும் என்றால் சிபிலை கவனமாக பராமரியுங்கள் என்று அனுபவஸ்வதர்கள் கூறுகிறார்கள்.
சொந்த வீடு என்பது இன்றைக்கு பலரது வாழ்நாள் கனவாக உள்ளது. ஆனால் பெரும் போராட்டத்திற்குப் பிறகு தங்க நகைகளை விற்று அல்லது அடகு வைத்து பணம் சேர்த்து, கையில் பணத்தை கூடுதலாக போட்டு, அத்துடன் வீட்டுக்கடன் வாங்கி ஒரு வீட்டைக் கட்டி முடிக்கிறார்கள் பலர். ஆனால், கடன் வாங்கிய பிறகு பலரும் செய்யும் ஒரு சிறிய தவறு, அவர்களின் மாதத் தவணையை அல்லது வட்டி விகிதத்தைக் குறைக்க முடியாமல் முட்டுக்கட்டை போடும் நிலையை ஏற்படுத்துகிறது. சில ஒரு நபரின் சொந்த அனுபவம். நிதித்துறை வல்லுநர்களின் ஆலோசனையிலிருந்தும் அவர் சொல்ல வரும் முக்கியமான செய்தி இதுதான்:

"சிபில்" (CIBIL) தான் இப்போதைய கடனுக்கு சாவி
இன்று பெரும்பாலான வங்கிகள் தங்களது வட்டி விகிதத்தை 'ரிஸ்க் பேஸ்டு ப்ரைசிங்' முறைக்கு மாற்றிவிட்டன. அதாவது, உங்கள் சிபில் ஸ்கோர் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு குறைவாக வட்டி விகிதம் இருக்கும். உங்கள் சிபில் ஸ்கோர் 750 அல்லது 800-க்கு மேல் இருந்தால், வங்கியில் பேசி வீட்டுக்கடன் வட்டியைக் கணிசமாகக் குறைக்க உங்களால் நிச்சயம் முடியும்.
தனிநபர் கடன்
வீடு வாங்கிய பிறகு, உட்புற அலங்காரம் அல்லது வேறு இதர செலவுகளுக்காக அவசரப்பட்டு தனிநபர் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் ஒரு தனிநபர் கடனை வாங்கும் போது, உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் குறைந்துவிடும்.
அடிக்கடி கடன் விசாரணை நடப்பதால் சிபில் ஸ்கோர் சரிய வாய்ப்பு இருக்கிறது. பலருக்கு சரிந்திருக்கிறது. இதனால், "நல்ல சிபில்" இருந்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய வட்டி குறைப்பு சலுகை உங்களுக்கு கிடைக்காமல் போகும்.
வட்டி குறைய என்ன செய்ய வேண்டும்
சிபிலை கவனமாகப் பராமரிக்க வேண்டும் என்கிறார் அந்த நண்பர். எந்தக் காரணத்தைக் கொண்டும் கிரெடிட் கார்டு நிலுவையோ அல்லது இதர இ.எம்.ஐ-களையோ ஒரு நாள் கூடத் தாமதிக்காமல் செலுத்துங்கள் என்றும் கூறினார். சந்தையில் வட்டி விகிதம் குறையும் போது, உங்கள் சிபில் ஸ்கோர் வலுவாக இருந்தால், வங்கியிடம் மனு கொடுத்து "எக்ஸ்டர்னல் பெஞ்ச்மார்க்" முறைப்படி வட்டியை மாற்றித்தருமாறு கோர முடியும்.
வீட்டுக்கடனை குறைக்க முடியவில்லை
நண்பர் ஒருவர் அனுபவத்தில் அவரே கூறியது. இன்று வங்கிகள் உங்கள் தற்போதைய சிபில் ஸ்கோரைத் தான் பார்க்குறாங்க.. எனவே, வீட்டுக்கடன் வட்டிச் சுமை குறைய வேண்டும் என்று ஆசை இருந்தால்.. வேறு புதிய கடன்களை வாங்கி சிபிலைச் சிதைத்துக் கொள்ளாமல் இருப்பதுதான் புத்திசாலித்தனமானதாக இருக்கும். ஏனெனில் நான் அதிக அளவில் தனிநபர் கடன் வாங்கியதால், வீட்டுக்கடன் வட்டியை குறைக்க வாய்ப்பு இருந்தும் குறைக்க முடியாமல் உள்ளேன் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications