ஏசியுடன் வரும் ஸ்டெப்லைசரை வாங்கவே கூடாதா.. உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் ஏசி வாங்கும் போது.. அத்துடன் ஸ்டெப்லைசரையும் நம் தலையில் கட்டுவார்கள். அந்த ஸ்டெப்லைசரை வாங்கலாமா வேண்டாமா என்று பல்வேறு குழப்பங்கள் மக்களிடம் இருக்கிறது. ஏனெனில் பலரும் ஏசி வாங்கும் போது ஸ்டெப்லைசர் வாங்காதீர்கள் என்றே கூறுவார்கள். அண்மையில் பொறியியல் தொடர்பான பல்வேறு சிக்கலான விஷயங்களை அறிவுப்பூர்வமாக விளக்கம் தந்து வரும ஒரு பிரபல யூடியூபரும் இதே கருத்தையே கூறியிருந்தார்.

உண்மையில் ஏசியுடன் கட்டாய இணைப்பாக வரும் ஸ்டெப்லைசரை வாங்கக்கூடாது தான். ஆனால் ஸ்டைப்லைசரே வாங்க வேண்டாமா என்றால், அதற்கு பதில் இல்லை என்பதே.. ஏனெனில் நம்மூரில் உள்ள வோல்ட்டேஜ் பிரச்சனைக்கு கண்டிப்பாக ஸ்டெப்லைசர் தேவை தான். ஆனால் என்ன மாதிரியான ஸ்டெப்லைசர் தேவை என்பது அவர்கள் வீட்டில் வரும் மின்சாத்தின் அளவை பொறுத்தே மாறுபடும். பொதுவாக இப்போதைய சூழலில் லோவோல்டேஜ் என்பது சர்வ சாதாரணமாக இருக்கிறது. பல வீடுகளில் மாலை நேரத்தில் மின்சாரம் லோ வோல்டேஜ் என்கிற அளவில் தான் இருக்கிறது. எனவே ஸ்டெப்லைசர் பற்றியும், ஏசி பற்றியும் சற்றே விரிவாக பார்ப்போம்.

Should you avoid buying the stabilizer that comes with the AC What is the truth

ஏசி என்ன வோல்டேஜில் வேலை செய்கிறது

இந்தியாவில் வீடுகளில் பயன்படுத்தும் ஏசிக்கள் பெரும்பாலும் 220 வாட்ஸ் முதல் 240 வாட்ஸ் AC (சிங்கிள் பேஸ், 50Hz) மின்சார வோல்டேஜில் இயங்குகிறது. நவீன இன்வெர்ட்டர் ஏசிகள் 140V முதல் 280V வரை வோல்டேஜ் மாறுபாடுகளைத் தாங்கி இயங்கும் தொழில்நுட்பத்துடன் இயங்கி வருகின்றன.

இதில் ஸ்டெப்லைசர்களின் வேலை என்ன

ஏசிக்கு தேவையான மின்சாரத்தை சரியாக மாற்றி தருவது தான்.. அதாவது, உங்கள் வீட்டில் இரவில் திடீரென ஏற்படும் வோல்டேஜ் மாற்றங்களைச் சீரமைத் ஏசிக்குத் தேவையான சரியான மின்னழுத்தத்தை சீராக வழங்வது தான் ஸ்டெப்லைசர்களின் வேலை. வீட்டின் வோல்டேஜ் ஏசிக்குத் தேவையான அளவை விட மிகக் குறைவாக அதாவது 190V-க்கும் கீழ் அல்லது மிக அதிகமாக 300V-க்கும் மேல் செல்லும்போது, ஏசியின் பாகங்கள் பழுதாகாமல் இருக்க மின்சாரத்தை உடனடியாகத் துண்டித்துவிடுவது தான் ஸ்டெப்லைசர்களின் வேலையாக உள்ளது. இந்த வேலையை செய்ய வேண்டும், அதாவது 190V-க்கும் கீழ் அல்லது மிக அதிகமாக 300V-க்கும் மேல் செல்லும்போது என்ற நிலையை சரி செய்ய வேண்டும் என்றால், சிங்கிள் பூஸ்டர், டபுள் பூஸ்டர் ஸ்டெப்லைசர்கள் போதாது. டிரிபிள் பூஸ்டர்கள்தான் தேவை..


லோ வோல்டேஜ் பிரச்சனை

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், லோ வோல்டேஜ் பிரச்சனை உள்ள பகுதிகள், புதிதாக உருவாகும் நகர் பகுதிகளில், புதிய வீடுகள் அதிகமாக உருவாகும் பகுதிகளில் இரவில் ஏசி ஓட வேண்டும் என்றால், அங்கு டிரிபிள் பூஸ்டர் ஸ்டெப்லைசர் தான் வேண்டும். அது குறைந்தது 8000 ரூபாய்க்கு மேல் இருக்கும். நல்ல பிராண்டட் நிறுவனத்தின் பூஸ்டர்களை வாங்குவதே நல்லது. அப்படி வாங்கி போடாமல் ஏசியுடன் இலவச இணைப்பாக வரும் சிங்கிள் பூஸ்டர் ஸ்டெப்லைசர்களை வாங்காமல் இருப்பதே நல்லது.

டிரிபிள் பூஸ்டர் ஸ்டெப்லைசர்களை ஏன் வாங்க வேண்டும்

ஏனெனில் நம்மூரில் நிலவும் மின்வெட்டு மற்றும் மின்பற்றாக்குறை பிரச்சனைக்கு சிங்கிள் பூஸ்டரால் எந்த பயனும் இல்லை. அதனை இலவசமாக தந்தாலும் வாங்காமல், பில்லில் இருந்து கழிப்பதே நல்லது. இதனை தான் பிரபல யூடியூபர் நேற்று கூறியிருந்தார். அது உண்மையும் கூட. ஏன் சிங்கிள் பூஸ்டர் ஸ்டெப்லைசர் வாங்க கூடாது என்றால், ஏசி பொதுவாக 190V முதல் மிக அதிகமாக 300V வரை வேலை செய்யும். சிங்கிள் பூஸ்டர்கள் 5 அல்லது 6 வாட்ஸ் தான் அகிகமாகவோ அல்லது குறைவாகவோ வேலை செய்யும். எனவே அதனை வேண்டாம் என்று நிராகரிப்பதே சிறந்தது.. அதேநேரம் டிரிபிள் பூஸ்டர் ஸ்டெப்லைசர்களை பொறுத்தவரை மின்சாரம் மிகக் குறைவாக 90V அல்லது 100V வரை குறைந்தாலும், அதை பூஸ்ட் செய்து ஏசி இயங்குவதற்குத் தேவையான 200V - 240V ஆக மாற்றித் தரும். எனவே வோல்டேஜ் பிரச்சனை உள்ளவர்கள் டிரிபிள் பூஸ்டர்களை தாராளமாக வாங்கலாம்.

1 டன் ஏசிக்கு 3 Ampere / 4 Ampere ஸ்டெப்லைசர்களை வாங்கலாம். 1.5 டன் ஏசிக்கு 4 Ampere / 5 Ampere ஸ்டெப்லைசர் வாங்கலாம். 2 டன் ஏசிக்கு 5 Ampere அதற்கு மேற்பட்ட ஸ்டெப்லைசர்களை வாங்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+