லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவின் தந்தை மறைவு.. முக ஸ்டாலின் உள்பட தலைவர்கள் இரங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவின் தந்தை கிருஷ்ணா பிர்லா மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவின் தந்தை ஸ்ரீகிருஷ்ணா பிர்லா வயது 92. அவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் நேற்று ஸ்ரீகிருஷ்ணா பிர்லா காலமானார். ஸ்ரீகிருஷ்ணா பிர்லாவின் இறுதி சடங்கு இன்று நடந்தது. கோட்டாவில் உள்ள கிஷோர்புரா தகன மைதானத்தில் ஸ்ரீகிருஷ்ணாவின் இறுதி சடங்கு நடந்தது.

Shri Krishna Birla, father of Lok Sabha Speaker Om Birla, passed away, Leaders condolences

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தில், "நாடாளுமன்ற லோக்சபா தலைவர் ஓம் பிர்லா அவர்களது தந்தை கிருஷ்ணா பிர்லா மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

ஓம் பிர்லா அவர்களுக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவர் முகுல் ராய் வெளியிட்ட பதிவில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஜியின் தந்தை மரியாதைக்குரிய ஸ்ரீகிருஷ்ணா பிர்லா காலமான செய்தி தெரிந்ததும் நான் மிகுந்த வேதனை அடைந்தேன் ஓம் பிர்லா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல். ஓம் சாந்தி. என குறிப்பிட்டு இருந்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்பியுமான சுப்ரியா சுலே டிவிட்டரில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் தந்தை ஸ்ரீகிருஷ்ணா பிர்லாவின் மறைவு குறித்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர் அமைதியுடன் ஓய்வெடுக்கட்டும். பிர்லா குடும்பத்தினருடன் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும். மனமார்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களின் தந்தை கிருஷ்ணா பிர்லா அவர்களின் மறைவு செய்தி கேள்விப்பட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். ஓம் பிர்லா அவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். இதேபோல் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+