Shruti Haasan: ஸ்ருதி ஹாசன் வீட்டில் அமானுஷ்ய சக்தியா? தானாக நகர்ந்த பொம்மை.. மும்பை வீட்டில் திக் திக்!
மும்பை: நடிகை ஸ்ருதி ஹாசன் தனது மும்பை வீட்டில் தனக்கு நேர்ந்த திகில் அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். வீட்டில் வைத்து இருந்த ஆளுயர பொம்மை, தானாகவே நகர்ந்ததாகவும் ஒரே இடத்தில் இருக்காமல் நகர்ந்தபடியே இருந்ததாகவும் கூறியுள்ளார்.
வீட்டில் விசித்திரமான சக்தியை உணர்ந்ததாக கூறியுள்ள ஸ்ருதி ஹாசன், ஹனுமன் மந்திரமும் கையில் உப்பும் வைத்து அந்த பொம்மையை அப்புறப்படுத்தியதாக கூறியுள்ளார். ஸ்ருதி ஹாசன் தனக்கு ஏற்பட்ட இந்த திகில் அனுபவத்தை பகிர்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன் வீட்டில் பேய்?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ருதி ஹாசன். தமிழ் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசனுக்கு சொந்தமாக மும்பை மற்றும் சென்னையில் வீடுகள் உள்ளன. இவரது மும்பை வீட்டில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்ததாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நேஹா துபியா மற்றும் அங்கத் பேடி தொகுத்து வழங்கும் டபுள் டேட் எனப்படும் நிகழ்ச்சியில் ஸ்ருதி ஹாசன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ருதி ஹாசன் பேசும் போது, "தனது வாழ்க்கையில் நடைபெற்ற சில சுவாரசிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் மும்பையில் உள்ள தனது வீட்டில் அமானுஷ்ய சக்தியை உணர்ந்ததாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக ஸ்ருதி ஹாசன் கூறியதாவது:-
மனித உருவிலான ஆளுயர பொம்மை
மும்பையில் உள்ள எனது வீட்டில் மனித உருவிலான ஆளுயர பொம்மை ஒன்றை வைத்து இருந்தேன். 'ஃபியோனா' என்று பெயரிட்டு அந்த பொம்மையை வைத்து இருந்தேன். என்னிடம் இருந்த அதிகப்படியான ஆடைகளை அலமாரியில் வைக்க இடமில்லாததால், அந்தப் பொம்மைக்கு அணிவித்தேன். எனது நண்பர்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அந்தப் பொம்மையைப் பார்த்து ஹாய் சொல்வார்கள்.
இறுதியில் அந்த ஃபியானோ பொம்மை யாரும் அதை நகர்த்தாமல் வெவ்வேறு இடங்களில் தானாகவே இடம் மாறியது. ஒரே இடத்தில் நிற்காமல் வெவ்வேறு இடங்களில் திரும்பி காணப்பட்டது. இதனால் நான் பதற்றம் அடைந்தேன். ஒரு இடத்தில் ஏதேனும் விசித்திரமான ஆற்றல் இருந்தால் அதை உணரும் திறன் எனக்கு உள்ளது. எனது சென்னை வீட்டில் இயற்கையான ஒரு எனர்ஜி இருக்கும்.
ஹனுமன் மந்திரமும் கையில் உப்பும் வைத்து
ஆனால் மும்பை வீட்டில் ஏதோ ஒன்று சந்தேகத்திற்கு இடமாக ஒன்று நடப்பதாக நான் உறுதியாக உணர்ந்தேன். இதையடுத்து, நான் ஆன்மீக பாதுகாப்பை நாடினேன். ஹனுமன் மந்திரமும் கையில் உப்பும் வைத்துக்கொண்டு அந்த மேனிக்கின் பொம்மையை அப்புறப்படுத்தினேன். அதன்பிறகு வீடு அமைதியாக உள்ளது. எனது குடும்பத்தில் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட ஒரே நபர் நான் தான்" என்றும் கூறினார்.
நடிகை ஸ்ருதி ஹாசன் இதற்கு முன்பாக கூலி படத்தில் நடித்து இருந்தார். அதன்பிறகு ராம்சரனின் பெடி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார். தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆகாசம்லோ ஓ தரா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 20 ஆம் தேதி திரைக்குக்கு வர உள்ளது.




Click it and Unblock the Notifications
