"டெக்னிக்கா மாத்தறான் சினிமாக்காரன்".. வன்னியர்களுக்கு ஆதரவாக களம் இறங்கிய ஷ்யாம் கிருஷ்ணசாமி!
கிருஷ்ணசாமி மகன் டாக்டர் ஷ்யாம், ஜெய்பீம் படத்துக்கு தன் கண்டத்தை தெரிவித்துள்ளார்
சென்னை: டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி ஜெய் பீம் படக்குழுவினர்களுக்கு தனது ட்விட்டர் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2 நாளைக்கு முன்பு திருமாவளவன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், 'ஜெய்பீம்' திரைப்படம் எளியோருக்கு எதிரான அரசப் பயங்கரவாதத்தை மிகவும் துல்லியமாக அம்பலப்படுத்தியுள்ளது.
சட்டமும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் காவல்துறை உள்ளிட்ட ஆட்சி நிர்வாக அமைப்புகளும் எவ்வாறு தலித் மற்றும் பழங்குடியினர் போன்ற விளிம்புநிலை மக்களுக்கு எதிராக இயங்குகின்றன? அவை சாதிய, மதவாத கும்பலால் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன? மாந்தநேயமில்லாத ஆதிக்க வெறியர்களின் கைகளில் சிக்கும் ஆட்சிநிர்வாக அதிகாரம் எவ்வளவு குரூரம் வாய்ந்ததாக எளியோரின் குருதியைக் குடிக்கிறது? போன்றவற்றையெல்லாம் இப்படம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது! சட்டம், அதிகாரம் போன்றவற்றின் பயன்பாடு குறித்து ஒரு மாபெரும் விவாதத்தையும் பொதுவெளியில் உருவாக்கியிருக்கிறது!" என்று தெரிவித்திருந்தார்.

திருமாவளவன்
விசிக தலைவர் சொன்னதுபோலவே, பொதுவெளியில் மிகப்பெரிய விவாதங்கள் வெடித்து கிளம்பி வருகின்றன.. அந்த வகையில், ஜெய்பீம் பட சர்ச்சை விவகாரம் இன்னமும் அடங்கவில்லை.. வன்னியர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.. சர்ச்சைக்குரிய காட்சிகள் மாற்றப்பட்டும், தினமும் கண்டனங்கள் அதிகமாகி கொண்டே வருகின்றன.

வன்னியர் சங்கம்
இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. பட தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், படம் வெளியான ஓடிடி தளமான அமேசான் ஆகியோருக்கு வன்னியர் சங்கத்தின் தலைவர் அருள் மொழி வக்கீல் நோட்டீசும் அனுப்பி இருக்கிறார்.

வன்னியர்கள்
அதேபோல, வன்னியர்களுக்கு பாஜகவும் தன்னுடைய ஆதரவை தெரிவித்து வருவதாகவே தெரிகிறது.. மூத்த தலைவர் எச்.ராஜா முதல் காயத்ரி ரகுராம் வரை, சூர்யாவை கடுமையாக விமர்சித்து கொண்டிருக்கிறார்கள்.. இதில் எச்.ராஜா இன்னும் அந்த படமே பார்க்கவில்லையாம்.. பார்க்காமலேயே அரை மணி நேரம் சூர்யா, ஜோதிகாவை திட்டி பேட்டி தந்துள்ளார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும் வன்னியர்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவே தெரிகிறது.

சண்டியத்தனம்
கடந்த சில தினங்களாகவே, ஜெய்பீம் படக்குழுவினர்களுக்கு தனது ட்விட்டர் தளத்தில் கண்டனம் தெரிவித்து வருகிறார்.. அதில் சில ட்வீட்கள்தான் இவை: "இவனுங்களுக்கு நியாயமான கேள்விகளை பக்குவமாக கேட்டால் திமிரா தான் பதில் சொல்லுவானுங்க... பெரிய கொம்பன் என்ற நினைப்பை எல்லாம் உடைத்து ஹீரோ முதல் தயாரிப்பாளர் வரை அழ விட்டாத்தான் இவனுங்க சண்டியத்தனம் கொஞ்சமாவது அடங்கும்!

சங்கங்கள்
"சினிமாக்காரர்கள் தங்களுக்கு ஏகோபித்த ஆதரவு போல் marketing செய்வதில் வல்லவர்கள். கொம்பன் படத்தை எதிர்த்தபோது இப்படிதான், நடிகர்/தயாரிப்பாளர் சங்கங்களும் வரிந்துகட்டி வந்தது, இறுதியில் நாங்கள் சொன்ன 72 இடங்களில் வசனங்களை மாற்றியும், ஒரு முழு பாடல் நீக்கப்பட்டே திரையில் வெளியானது!

சினிமாக்காரன்
"அதிகாரத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியினரின் கதையில் எதற்கு உண்மைக்கு புறம்பாக வன்னியர்களை கலங்கப்படுத்தனும் என சினிமா காரனிடம் அந்த சாதியை சார்ந்தவர்களின் நியாயமான கேள்வியை, அப்படியே பழங்குடியினருக்கு எதிரானதாக திரித்து தனக்கான ஆதரவை திரட்டும் யுக்தியாக மாற்றுகிறான் சினிமா காரன்!

தீண்டாமை
"பழங்குடியினர் எப்போது சாதிய படிநிலைகளுக்குள் திணிக்கப்பட்டனர்? Schedule Tribe என்று SC தீண்டாமையுடன் சேர்த்த பிறகா? தலித்திய வாதிகளும் திடீர் சமூகநீதி ஈசல்களும் தங்களை தாங்களே சிறுமை படுத்திக்கொள்ளும் அரசியலை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள். பழங்குடியினர் மீது திணிக்க வேண்டாம்" என்று அடுத்தடுத்த ட்வீட்களை பதிவிட்டு கொண்டே இருக்கிறார்.
Recommended Video

கேள்விகள்
புதிய தமிழகம் கட்சியின் இளம் அரசியல் முகமாக அறியபடுபவர் ஷ்யாம் கிருஷ்ணசாமி.. இவர் ஒரு டாக்டர்.. முழு நேர அரசியலில் இல்லாவிட்டாலும், தமிழகத்தின் முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்து அடிக்கடி கருத்துக்களை தெரிவித்து வருபவர்.. இப்போது, ஜெய்பீம் படம் பற்றி வன்னியர் அமைப்பு தவிர வேறு யாருமே அவ்வளவாக எதிர்ப்பு காட்டாத நிலையில், இந்த லிஸ்ட்டில் ஷ்யாமும் இணைந்துள்ளார்.. ஆனால், ஷ்யாம் எழுப்பிய கேள்விகள், கருத்துக்கள், உரிய பதில்களையும், தீர்வுகளையும் பொதுவெளியில் பெற்று தருமா? அல்லது விவாதிக்கப்படுமா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications