எஸ்.ஐ. வில்சன் படுகொலை- காஞ்சிபுரத்தில் சிக்கிய தீவிரவாதிகளின் கூட்டாளிகள்
Recommended Video
சென்னை: கன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 6 பேர் காஞ்சிபுரத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வில்சன் கொலையாளிகளான அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் கர்நாடகாவின் உடுப்பியில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரையும் 15 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்க உள்ளனர்.

இதனிடையே இந்த தீவிரவாதிகளுக்கு பல்வேறு வகைகளில் உதவிய பலரும் அடுத்தடுத்து சிக்கி வருகின்றனர். தீவிரவாதிகள் பயன்படுத்திய சிம்கார்டுகளை சோதனை செய்ததன் அடிப்படையில் காஞ்சிபுரம் செல்போன் கடைகளில் போலீசார் ரெய்டு நடத்தினர்.
இதில் 6 பேரை சுற்றி வளைத்து போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஏற்கனவே தீவிரவாதிகளுக்கு உதவியதாக பெங்களூரு, காஞ்சிபுரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த உசேன் ஷெரீப்பை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர். இந்த ஒட்டுமொத்த நெட் ஒர்க்கையும் காஜா முகைதீன் என்ற தீவிரவாதி இயக்கி வந்துள்ளார்.
அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காஜாமுகைதீனை வெளிநாட்டில் இருந்து இயக்கி வரும் பயங்கரவாதி குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications