மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்!
பெங்களூர்: மே 28ஆம் தேதியன்று கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சி தரப்பில் அளிக்கப்பட்ட அனைத்து ஆஃபர்களையும் சித்தராமையா நிராகரித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. தன்னுடைய நெருங்கிய நட்பில் உள்ளவர்களுடன் ஆலோசனை நடத்திய சித்தராமையா, இறுதியாக இந்த முடிவினை எடுத்துள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் அரசில் கடந்த சில மாதங்களாகவே நீடித்து வந்த முதலமைச்சர் நாற்காலிக்கான அதிகாரப் போட்டி தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் ஆகிய இருவரையும் காங்கிரஸ் மேலிடம் அவசரமாக டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தையில் கர்நாடகா முதல்வர் மாற்றம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாக டெல்லி அரசியல் வட்டாரங்களிலிருந்து நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து மே 20ஆம் தேதியுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த போதே, இருவருக்கும் தலா 2.5 ஆண்டுகள் முதல்வராக பதவியில் இருக்க ஒப்பந்தம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது 3 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், தனக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று டி.கே. சிவக்குமார் தரப்பு தீவிர அழுத்தம் கொடுத்து வந்தது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் இரு தலைவர்களையும் அவசரமாக டெல்லிக்கு அழைத்து தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்படி 77 வயதான மூத்த தலைவர் சித்தராமையாவை கவுரவமான முறையில் முதல்வர் பதவியிலிருந்து விடுவிக்க காங்கிரஸ் மேலிடம் ஒரு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் ஜூன் மாதம் கர்நாடகாவில் இருந்து காலியாகும் 4 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஒரு இடத்தை சித்தராமையாவுக்கு வழங்கி, அவரை மத்திய அரசியலுக்குக் கொண்டு வர மேலிடம் திட்டமிட்டுள்ளது.
சித்தராமையா முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கும் பட்சத்தில், கர்நாடக சட்டமேலவை உறுப்பினராக இருக்கும் அவரது மகன் யதீந்திர சித்தராமையாவுக்கு அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. முதல்வர் பதவியை டி.கே.சிவக்குமாருக்கு வழங்காவிட்டால் உள்கட்சிப் பூசல் அதிகமாகி, அது 2028 சட்டசபைத் தேர்தலைப் பாதிக்கும் என காங்கிரஸ் தலைமை கவலைப்படுகிறது.
ஆனால் பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு சித்தராமையாவுக்கே இருப்பதால், இந்த அதிகார மாற்றத்தை எவ்வித எதிர்ப்பும் இன்றி சுமூகமாக நடத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது டெல்லியில் பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொண்டு முதலமைச்சர் சித்தராமையா பெங்களூரு திரும்புகிறார்.
இதனால் கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான சூழலில் நாளை மறுநாள் சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி சார்பாக சித்தராமையாவுக்கு பல்வேறு ஆஃபர்கள் அளிக்கப்பட்டுள்ள போதும், அதனை அவர் நிராகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் உடனான ஆலோசனைக்கு பின், தன்னுடைய ஆதரவாளர்களுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனைக்கு பின் முதல்வர் பதவியில் இருந்து விலகும் முடிவை சித்தராமையா எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
-
நாங்க உங்க கூட இல்ல ப்ரோ.. செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்? மாணிக்கத்துக்கு வந்த திடீர் மவுசு -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications