Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வைரஸிலிருந்து செல்களை பாதுகாக்கும் கேடயம் சிறப்பு மூலிகை தேநீர் -சித்த மருத்துவர் வீரபாபு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா வைரஸை ஒழிக்கும் நடவடிக்கையாக சென்னை முழுவதும் சிறப்பு மூலிகை தேநீர் என்ற பெயரில் கடந்த 2 நாட்களாக சிறப்பு பானம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு மூலிகை தேநீர் குறித்தும், அதன் பயன்கள் பற்றியும் அறிவதற்காக சித்த மருத்துவர் வீரபாபுவை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் கூறியதாவது;

'' சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு மூலிகை தேநீர் கொடுத்து வருகிறோம். முதற்கட்டமாக கோயம்பேட்டில் கொடுத்துள்ளோம், அடுத்தகட்டமாக வியாழக்கிழமை முதல் ராயபுரம் மண்டலத்தில் இந்த சிறப்பு மூலிகை தேநீரை வழங்க இருக்கிறோம். அரசுடன் கூட்டாக இணைந்து இந்த மூலிகை தேநீரை தயாரிக்கிறோம்''.

siddha doctor veerababu explains, what is special herbal tea?

''சிறப்பு மூலிகை தேநீர் என்பது கபசுரக் குடிநீரில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதில் சித்தரத்தை, அதிமதுரம் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டு கசப்பு குறைக்கப்பட்டுள்ளது. கபசுரக் குடிநீருக்கும், சிறப்பு மூலிகை தேநீருக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், கபசுரக் குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறப்பு மூலிகை தேநீரோ மனித உடலில் உள்ள செல்களுக்குள் வைரஸ் உட்புகாதவாறு கேடயமாக நின்று நம்மை நோயில் இருந்து பாதுகாக்கும்.''

siddha doctor veerababu explains, what is special herbal tea?

''சிறப்பு மூலிகை தேநீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலக்கூறுகளை சோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். இன்னும் நான்கு நாட்களில் எழுத்துப்பூர்வமாக முடிவுகள் வெளிவந்துவிடும். தற்போது ஆய்வுக் கூடத்தில் இருந்து எனக்கு ஓரலாக என்ன கூறினார்கள் என்றால், சிறப்பு மூலிகைத் தேநீர் வைரஸை அடியோடு அழிக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறது என்பது தான்''.

தமிழகம் முழுவதும் சிறப்பு மூலிகை தேநீர் விநியோகம் செய்வது பற்றி அரசு தான் முடிவெடுக்கும். இதனிடையே மூலிகை தேநீர், கபசுரக்குடிநீர் என்ற பெயரில் போலி தயாரிப்புகள் வந்துள்ளதாக புகார் வருகின்றன. அதன் மீதும் அரசும், சுகாதாரத்துறையும் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்''

சித்த மருத்துவர் வீரபாபு கூறுவதை வைத்து பார்த்தால், கொரோனாவை அழிக்க சிறப்பு மூலிகை தேநீர் நல்ல பயன் தரும் என்பது விளங்குகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+