கிச்சன் அறையில் சிம்பு காட்டிய விரல் வித்தை.. செம வீடியோ.. ஒரு கோடி கடந்து மாஸ் சாதனை!
சென்னை: நடிகர் சிலம்பரசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சமையல் செய்யும் வீடியோவை கோடி பேர் பார்த்துள்ளனர்
Recommended Video
நடிகர் சிம்பு மீண்டும் தனது உடல் எடையை குறைத்து பல அதிரடி மாற்றங்களுடன் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். இதனிடையே தனது தங்கை மகனுடன் சிம்பு இருக்கும் வீடியோக்கள் வைரலாகி வந்தன.
அது போல் உஷா ராஜேந்திரன் மகன் சிம்புவுக்கும் பேரனுக்கும் உணவு கொடுக்கும் காட்சிகளும் வைரலாகின. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள மாநாடு எனும் படத்தில் சிம்பு நடித்துள்ளார்.

முதல் சிங்கிள்
இதில் லைட்டாக தாடியை வைத்திருந்தார். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் கடந்த மாதம் 21-ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் சிம்பு தனது கிச்சனில் ஜாலியாக சமைக்கும் வீடியோ ஒன்றை எடுத்து போட்டுள்ளார்.

இன்ஸ்டா பக்கத்தில் சிம்பு
இதுகுறித்து அவர் பதிவிட்டிருந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "பன்னீர் மஷ்ரூம் செய்கிறேன். லாக்டவுன் என்பதால் ஷேவ் செய்துவிட்டேன். என் முகமே இப்பத்தான் எனக்கு தெரியுது. இவ்வளவு நாள் தாடியே வச்சிருந்ததால் தெரியலை என தன்னை வீடியோ எடுக்கும் சையது நிவாஸிடம் பேசிக் கொண்டே நடிகர் சிம்பு சமையல் செய்கிறார்.

முகம்
இந்த வீடியோவில் தனது முகத்தை சிம்பு கண்ணாடியில் பார்த்துக் கொள்வதும், தலை முடியை கோதி விடுவதும் பார்க்கவே அட்டகாசமாக இருக்கிறது. இந்த வீடியோ வைரலானது.

1 கோடி
தற்போது இந்த வீடியோவை 1 கோடி பேருக்கும் மேலானோர் பார்த்து ரசித்துள்ளனர். இதுவரை இவரது வீடியோவை 10,222,930 பேர் பார்த்துள்ளனர். இதை பார்த்த சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications