நிலைமை கைமீறி போகுது.. தங்கத்தை விடுங்க.. வெள்ளியை வாங்கி குவிங்க.. இப்போ முக்கியம் இதுதான்
சென்னை: சர்வதேசச் சந்தையில் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 காரட் தங்கம் விலை ₹13,069 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 காரட் தங்கம் விலை ₹11,980 ஆகவும், 1 கிராம் 18 காரட் தங்கம் விலை ₹9,995 ஆகவும் உள்ளது. இன்று சென்னை நகரில் ஒரு கிராம் வெள்ளி விலை ₹192 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ₹1,92,000 ஆகவும் உள்ளது.
சர்வதேச அளவில் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 56 டாலரைக் கடந்து, 56.455 டாலராக உயர்ந்தது. இது, வெள்ளி உள்ளிட்ட உலோகங்களின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்ததாலும், அமெரிக்க மத்திய வங்கி அடுத்த மாதம் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பினாலும் ஏற்பட்டது.

மார்ச் 2026 டெலிவரிக்கான வெள்ளி ஃபியூச்சர்கள், மல்டி-கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) சந்தையில் கிலோகிராமுக்கு 9,497 ரூபாய் அல்லது 5.72% அதிகரித்து, 1,75,484 ரூபாயாகப் புதிய சாதனை படைத்தது.
இதேபோல், டிசம்பர் காலாவதிக்கான வெள்ளி விலை கிலோகிராமுக்கு 1,72,099 ரூபாயாக உயர்ந்து, அக்டோபர் 17, 2025 அன்று எட்டியிருந்த முந்தைய உச்சமான 1,70,415 ரூபாயைக் கடந்து புதிய உச்சத்தை அடைந்தது.
வெள்ளி விலை புதிய உச்சம்
இந்த வாரத்தில் வெளியான அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகள், மத்திய வங்கி டிசம்பரில் வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு 86.4% வாய்ப்புள்ளதாக கூறி உள்ளது.
வெள்ளி ஆபரணமாக மட்டும் இல்லாமல் தொழில்துறை சார்ந்த பொருளாகவும் மதிப்பிடப்படுகிறது. புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரித்ததன் காரணமாக, 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் வெள்ளியின் மீதான முதலீடு அதிகரித்தது. சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் காரணமாக வெள்ளி விலை அதிகரித்தது
பல ஆய்வாளர்களின் கூற்றுப்படி, வெள்ளி மீண்டும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வெள்ளி $40-ஐ தாண்டினால், அதன்பின் அதை நிறுத்தவே முடியாது தொடர்ந்து உயரும் என்று கணிப்புகள் வெளியாகி உள்ளன. வெள்ளியின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது என்பது தெளிவாகிறது. வெள்ளி ஆதரவுள்ள பரிவர்த்தனை-வர்த்தக பொருட்கள் (ETP) 2024-ல் US$40 பில்லியனை எட்டி உள்ளது மேலும், சூரிய சக்தி, மின்னணுவியல் மற்றும் மின்மயமாக்கல் போன்ற துறைகளில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது உலகளாவிய தேவையில் பெரும் பங்கை வகிக்கிறது. இது வெள்ளியின் நீண்டகால முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
வெள்ளி உயரும்
வரும் மாதங்களில் தங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி அதிக லாபத்தை அளிக்கும் என்று சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
பொருளாதார வல்லுனர்கள் வெள்ளியில் கவனம் செலுத்துவதற்கான மற்றொரு முக்கிய காரணம், தங்கம்-வெள்ளி இடையிலான விகிதம் ஆகும். இந்த விகிதம் கடந்த சில மாதங்களில் 100-ஐ தாண்டியுள்ளது. அதாவது தங்கம் வெள்ளி வேறுபாட்டை வைத்து இந்த விகிதம் நிர்ணயிக்கப்படும். கோவிட் நெருக்கடிக்குப் பிறகு இரண்டாவது முறையாக விகிதம் 126 ஐ எட்டி உள்ளது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்கக்கூடிய அதே பணத்தில் எவ்வளவு அவுன்ஸ் வெள்ளி வாங்க முடியும் என்ற அடிப்படையில் இந்த விகிதம் கணக்கிடப்படுகிறது. தங்கம் வெள்ளியை விட மிக வேகமாக உயர்ந்துள்ளதால் இந்த விகிதம் அதிகரிக்கிறது.
ஆனால் வரலாற்று தரவுகளின்படி சென்றால் இந்த விகிதம் வரும் நாட்களில் குறையும். இதன் அர்த்தம் வெள்ளி விலை வேகமாக உயர்ந்து.. தங்கத்துடன் உள்ள வேறுபாட்டை குறைக்கும். அதாவது இப்போது உள்ள வேறுபாடு நீடிக்காது. இதன் அர்த்தம் தங்கத்தின் விலைக்கு கொஞ்சம் அருகில் வெள்ளி வரும். கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த விகிதம் 80 க்கு மேல் இருந்தது. கடந்த 25 ஆண்டுகளில் (2000 முதல்), இந்த சராசரி 68 ஆக உள்ளது, 10 ஆண்டு சராசரி 85 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்த விகிதம் அதிகமாக இருந்தது, ஏனெனில் தங்கம் 260% வருமானம் அளித்தது, வெள்ளி 60% வருமானம் கொடுத்தது.
இப்போது இந்த விகிதத்தை சரி செய்ய.. வெள்ளி விலை வேகமாக உயரும். இது வெள்ளியில் முதலீடு செய்பவர்களுக்கு சாதகமாக அமையும்.












Click it and Unblock the Notifications