தங்கத்தை விடுங்க.. ஆட்டம் போடும் வெள்ளி.. இப்போது வாங்கலாமா.. வேண்டாமா? நிபுணர்கள் அட்வைஸ்
சென்னை: தங்கம் ஒரு பக்கம் எகிறிக்கொண்டிருக்க, அதன் 'சகோதரர்' வெள்ளியோ கடந்த சில மாதங்களாக முதலீட்டாளர்களை ஒரு வழி பண்ணிக்கொண்டிருக்கிறது. இப்போது தங்கம் வாங்கலாமா வேண்டாமா என்ற கேள்வியை போலவே இப்போது வெள்ளி வாங்கலாமா வேண்டாமா என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.. அதற்கான பதிலை நிபுணர்கள் தந்துள்ளனர்!
2025-ம் ஆண்டில் மட்டும் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை சுமார் 144% வரை எகிறி, முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பொருளாதார மற்றும் அரசியல் நிச்சயமற்ற சூழலால், பாதுகாப்பான முதலீடாகக் கருதி பலரும் வெள்ளியில் தஞ்சம் புகுந்தனர்.
வெள்ளியில் தஞ்சம்
அந்த வேகம் 2026 ஜனவரியிலும் தொடர்ந்தது. ஒரு அவுன்ஸ் வெள்ளி 121 டாலர் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்தது. ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஏப்ரல் மாதத் தொடக்கமான தற்போது, உச்சத்திலிருந்து 38% சரிந்து, வெறும் 75 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

திடீரென வெள்ளி விலை இப்படிச் சரியக் காரணம் என்ன? 100 டாலருக்குக் கீழ் கிடைப்பதால் இப்போது வாங்கலாமா? விரிவாகப் பார்ப்போம்.
தொழில்துறை டிமாண்ட்: வெள்ளியின் பலவீனம்!
தங்கத்தைப் போலல்லாமல், வெள்ளியின் விலை அதன் பயன்பாட்டைப் பொறுத்தே அமைகிறது. மின்னணு சாதனங்கள் (Electronics), உலோகக் கலவைகள் (Alloys) மற்றும் சோல்டரிங் (Solders) போன்ற தொழில்துறைகளில் வெள்ளியின் பயன்பாடு மிக அதிகம்.
தற்போதைய மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால், உலகப் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்திக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் விளைவாக, தொழில்துறை உற்பத்தி குறைந்தால் வெள்ளிக்கான தேவையும் குறையும் என எண்ணி முதலீட்டாளர்கள் வெள்ளியை விற்று வெளியேறி வருகின்றனர்.
சீனாவின் 'செக்' மற்றும் விநியோகச் சங்கிலி!
வெள்ளி சந்தையில் முதலீட்டாளர்களின் பங்கு வெறும் 21% தான். ஆனால், தொழில்துறை நிறுவனங்கள் மொத்த விநியோகத்தில் 50%-க்கும் மேல் பயன்படுத்துகின்றன. இதில் முக்கிய திருப்பம் என்னவென்றால், உலகின் இரண்டாவது பெரிய வெள்ளி ஏற்றுமதியாளரான சீனா, கடந்த ஆண்டு சில ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்தது.
தன் நாட்டு மின்னணு உற்பத்தித் துறையைப் பாதுகாக்க சீனா எடுத்த இந்த முடிவு, உலக சந்தையில் வெள்ளித் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி 2025-ல் விலையை உயர்த்தியது. இந்த கட்டுப்பாடுகள் 2026 மற்றும் 2027 வரை நீடிக்கும் என்பதால், நீண்ட கால அடிப்படையில் விலை உயர வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.
வெள்ளி விலை இப்படிச் சரியக் காரணம் என்ன? முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!
வரலாற்று ரீதியாகப் பார்த்தால், தற்போதைய 38% சரிவு இன்னும் சில காலம் நீடிக்கலாம். எண்ணெய் விலை உயர்வால் ஏற்படப்போகும் பொருளாதார மந்தநிலை, வெள்ளியின் விலையை மேலும் கீழிறக்க வாய்ப்புள்ளது.
நிபுணர்களின் அட்வைஸ்
நீங்கள் இப்போது வெள்ளியில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால், குறுகிய கால லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலான நீண்ட கால இலக்கு இருந்தால் மட்டுமே, இந்த 'டிப்'-பைப் பயன்படுத்தி முதலீடு செய்வது புத்திசாலித்தனம்!
கையில் காசு இருக்கிறது என்பதற்காக உடனே 'வெள்ளி' எடுக்காமல், சந்தையின் போக்கை உன்னிப்பாகக் கவனிப்பது அவசியம்!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications