Silver Price: தங்கத்தை விடுங்க! வெள்ளியின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ 85 ஆயிரம் சரிவு!
சென்னை: சென்னையில் ஒரே நாளில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ 85 ஆயிரம் குறைந்துள்ளதால் வெள்ளி நகையை வாங்க செல்வோர் மனமகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னையில் தங்கம், வெள்ளியின் விலை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ 20 ஆயிரம், 30 ஆயிரம் இருந்த காலங்களில் வெள்ளியின் விலை மிகவும் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. கிட்டதட்ட கிராம் 50 ரூபாய்க்குள்தான் இருந்திருக்கும்.

அப்போது பெரியவர்கள் வெள்ளியில் காப்பு, அரைஞாண் கயிறு, வெள்ளியில் காதணி, வெள்ளியில் சுவாமி சிலைகளை வாங்கினர். ஆனால் தற்போது வெள்ளியின் விலை ரூ 100, ரூ 200 அல்ல ரூ 300ஐ தாண்டி சென்றுவிட்டது. அன்றைய காலகட்டத்தில் ஒரு கிராம் வெள்ளி 30 எனில் 10 கிராம் வெள்ளி 300 ரூபாய் வாங்கியிருப்போம்.
இதே ஒரு கொலுசு என போனால் 50 கிராம் வரை நன்கு திடகாத்திரமாக இருக்கும். அப்படி பார்த்தால் 1500 ரூபாயில் முடிந்துவிடும். அப்படியே செய்கூலி என சேர்த்தால் கூட ரூ 2000-த்தில் முடிந்துவிடும்.
ஆனால் தற்போது அப்படி அல்ல. இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 350க்கு விற்பனையானது. ஒரு 50 கிராமில் கொலுசு வாங்க வேண்டும் என்றால் 17,500 ரூபாய் செலவிட வேண்டும். இதே செய்கூலியுடன் சேர்த்தால் நிச்சயம் ரூ 19 ஆயிரம் வரை செலவிட வேண்டியிருக்கும்.
தங்கத்தை போல் வெள்ளியின் விலையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த காலத்தில் வெள்ளியின் விலை குறைவு என்பதால் அது தொலைந்தாலும் பலர் கவலைப்பட்டதில்லை. ஆனால் தற்போது ஒவ்வொரு கிராமும் நமக்கு காசு!
இன்று காலை வெள்ளியின் விலைகிராமுக்கு ரூ 55 குறைந்து ஒரு கிராம் ரூ 350-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 3,50,000-க்கும் விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது பிற்பகலில் வெள்ளியின் விலை ரூ 30 குறைந்து ஒரு கிராம் ரூ 320-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 3,20,000-க்கும் விற்பனையாகிறது.
இன்று ஒரே நாளில் இரு முறை வெள்ளி விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 85 ரூபாயும் கிலோவுக்கு ரூ 85 ஆயிரமும் குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க மக்களே! சடக்குனு சரிந்த தங்கம்! இது தான் சரியான டைம்! எப்படி? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications