Silver rate: வெள்ளி விலை விர்ர்ர்ர்.. வரலாற்றில் முதல் முறையாக ஒரே நாளில் ரூ.31,000 உயர்வு!
சென்னை: தங்கம், வெள்ளி விலை நாள்தோறும் கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலை வெகுவாக அதிகரித்து வந்த சூழலில் இன்றும் வரலாறு காணாத வகையில் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிராம் வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.31 உயர்ந்துள்ளது.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, வெள்ளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு 31,000 ரூபாய் அதிகரித்து, 2 லட்சத்து 85 ஆயிரம் எனும் உச்சத்தை அடைந்துள்ளது.

ஒரு சவரன் தங்கம் விலை, ஒரு லட்சம் ரூபாயை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், வெள்ளி விலையும் விறுவிறுவென கூடிக்கொண்டே செல்கிறது. நாளொன்றுக்கு 50 பைசா, 1 ரூபாய் என ஒரு கிராம் வெள்ளியின் விலை அதிகரித்து வந்த காலம் மாறி, இப்போது கிராமுக்கு 10 ரூபாய், 20 ரூபாய் என தடாலடியாக உயர்ந்து வருகிறது.
பிப்ரவரி மாத தொடக்கத்தில் கிராம் வெள்ளி 107 ரூபாயாக இருந்த சூழலில், அது ஏப்ரல் மாதத்தில் 114 ரூபாயாகவும், ஜூலை மாதத்தில் 120 ரூபாயாகவும் உயர்ந்தது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் 136 ரூபாயாக இருந்த ஒரு கிராம் வெள்ளி, அக்டோபர் 1ஆம் தேதி 161 ரூபாயாக புது உச்சம் தொட்டது.
அக்டோபர் மாதத்திலேயே 200 ரூபாயை கடந்த வெள்ளி விலை, இடைப்பட்ட காலங்களில் குறைந்து வந்தது. டிசம்பர் 10ஆம் தேதி மீண்டும் 200 ரூபாயை கடந்தது. அடுத்த 14 நாட்களில் கிடுகிடுவென அதிகரித்து, 244 ரூபாய் எனும் புதிய உச்சத்தை அடைந்தது.
இந்நிலையில், இன்று காலை வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அதன்படி, கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.274-க்கும், கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் அதிகரித்து ஒரு கிலோ ரூ.2,74,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை இரண்டாவது முறையாக வெள்ளி விலை உயர்வைக் கண்டுள்ளது. வெள்ளி விலை இன்று மேலும் கிராமுக்கு ரூ. 11 உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.31 உயர்ந்து ரூ.285க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிராம் வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.31 உயர்வைக் கண்டுள்ளது. அதாவது இன்று மட்டுமே கிலோவுக்கு ரூபாய் 31,000 அதிகரித்துள்ளது வெள்ளி விலை. வெள்ளி விலை கடந்த 11 நாட்களில் கிலோவுக்கு ரூ.63 ஆயிரம் அதிகரித்து உள்ளது.
தங்கம் விலையும் இன்று மாலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,680 உயர்ந்து ரூ.1,04,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
ரெண்டு நாள்ல அழுகி போற தக்காளிக்கே மவுசு வரும் போது.. தங்கத்துக்கு வராதா? வாங்கி குவிக்கும் வங்கிகள் -
Gold Price Today: தங்கம் விலை மளமளவென சரிந்தது.. 2வது நாளாக இன்றும் குறைந்தது.. நகை பிரியர்கள் குஷி! -
தங்கம் விலை தொடர் உயர்வா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. கெவின் வார்ஷ் முடிவில் தான் எல்லாமே இருக்கு! -
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
இந்தியாவில் வெள்ளி இறக்குமதி 87% அதிரடி வீழ்ச்சி.. நகை விலை உயர்வு.. இனி சிக்கல் மேல் சிக்கல்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications