நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு
சென்னை: கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான சிலம்பரசன் (STR), சிம்ரன், ஷாம் மற்றும் சினேகா-பிரசன்னா தம்பதியினர் சென்னை நீலாங்கரையில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கு நேரில் சென்று தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அடுத்தடுத்த சந்திப்புகள், புதிய முதலமைச்சருக்குத் திரையுலகினர் மத்தியில் இருக்கும் பிரம்மாண்ட ஆதரவையும், ஆழமான நட்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி, சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கட்டிலில் ஏறியது.

ஜோசப் விஜய் ஆட்சி
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்று, கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் உரிய பங்கைக் கொடுத்து அரியணையை அலங்கரித்ததோடு, தற்போது தனது ஒரு மாத கால ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
சிங்கப்பெண் அதிரடி படை திட்டம், டாஸ்மாக் மூடல் போன்ற அதிரடியான திட்டங்களால் மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் முதல்வர் விஜய், சோபா மாடல் ஆட்சி என்று விமர்சித்தவர்களின் வாய்களைத் தன் களப்பணிகள் மூலம் அடைத்து வருகிறார்.
நீலாங்கரை வீட்டில் பிரபலங்கள்
இந்நிலையில், பதவிப் பிரமாணம் எடுத்த முதல் சில நாட்களிலேயே சினிமா தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம் எனப் பல தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்த சூழலில், தற்போது கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் வரிசையாக சென்னை நீலாங்கரையில் உள்ள முதல்வரின் இல்லத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே பார்த்திபன், பிரபு போன்ற சீனியர் நடிகர்கள் சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில், தனது குடும்பமே விஜய்யை கடுமையாக விமர்சித்தாலும், தான் ஆரம்பம் முதலே விஜய்யின் தீவிர ஆதரவாளர் என்று பகிரங்கமாக நிரூபிக்கும் வகையில் நடிகர் சிபிராஜ் முதல்வரைச் சந்தித்துப் பேசிய போட்டோக்கள் இணையத்தில் பரவின.
சிம்ரன் நெகிழ்ச்சி பதிவு
கடந்த வாரம் நடிகை சினேகா மற்றும் பிரசன்னா தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் வந்து முதல்வரைச் சந்தித்தனர். அதேபோல், விஜய்யுடன் இணைந்து குஷி மற்றும் வாரிசு ஆகிய மெகா ஹிட் படங்களில் நடித்ததோடு, விஜய்யின் தீவிர ரசிகராக அறியப்படும் நடிகர் ஷாம், முதல்வரை நேரில் நெகிழ்ச்சியோடு கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்து, "லவ்யூ அண்ணா" என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் உருக வைத்தார்.
அதேபோல நேற்றைய தினமும் திரைப்பிரபலங்கள் விஜய்யை சந்தித்துள்ளனர்.. தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஜோடிகளில் ஒருவரான நடிகை சிம்ரன் நேற்று முதல்வர் விஜய்யை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நெடிய உரையாடலை நிகழ்த்தியுள்ளார்.
தனக்கு இணையாகத் திரையில் டான்ஸ் ஆடக்கூடிய ஒரே திறமையாளர் சிம்ரன் தான் என்று விஜய்யால் பலமுறை பாராட்டப்பட்டவர் சிம்ரன்.
பல வருடங்களுக்குப் பிறகு இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாகவும், பலரையும் காந்தம் போல் ஈர்க்கும் விஜய்யின் அதே அன்பும், பணிவும், நேர்மையும் இன்னும் மாறாமல் அப்படியே இருப்பதாகவும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான அவரது மாபெரும் தொலைநோக்குப் பார்வையும், பேரார்வமும் தனக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாகவும் கூறி, புதிய தமிழகத்தை நோக்கி வழிநடத்தும் முதல்வருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சிம்பு - விஜய் சந்திப்பு
இந்த சந்திப்புகளுக்கெல்லாம் உச்சகட்டமாக, சினிமாவில் சமகாலப் போட்டியாளராகவும், விஜய்யின் நீண்டகால நெருங்கிய நண்பராகவும் கருதப்படும் நடிகர் சிலம்பரசன், முதல்வரின் இல்லத்திற்கு அதிரடியாகச் சென்று பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்துப் பெற்றுள்ளார்.
வாலு மற்றும் ஜனநாயகன் திரைப்படங்களின் வெளியீட்டுச் சிக்கல்களின் போது விஜய்யும், அவரது தந்தை டி.ராஜேந்தரும் தோளோடு தோள் நின்ற அந்த பழைய நட்பை இந்த சந்திப்பு மீண்டும் புதுப்பித்துள்ளது.
இது குறித்து சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில், "மாண்புமிகு முதல்வர் விஜய் அண்ணாவைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. தமிழக மக்களுக்குச் சேவையாற்றும் வேளையில் அவருக்குத் தேவையான வலிமையும், வெற்றியும், இறைவனின் ஆசீர்வாதங்களும் கிடைக்க வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
திரையுலகின் ஒட்டுமொத்த ஆதரவும் தற்போதைய முதல்வருக்குப் பின்னால் இருப்பதை இந்த தொடர் சந்திப்புகள் திட்டவட்டமாக உணர்த்துகின்றன....!!!
-
காணொலி விசாரணைக்கு நோ சொன்ன நீதிமன்றம்! முதல்வர் விஜய்-சங்கீதா நேரில் ஆஜராகனும்! விசாரணை ஒத்திவைப்பு -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
Moral போலீசா சிங்கப்பெண்கள் படை? முதல் திட்டமே சொதப்பல்! சரமாரியாக எழும் குற்றச்சாட்டுகள்! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
சில நாய்களுக்கு நான்வெஜ்தான் பிடிக்கும்.. ராகவா லாரன்ஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை! -
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்!












Click it and Unblock the Notifications