Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாருமே என்கிட்ட கூட வரல.. எனக்காக ஏஆர் ரஹ்மான் செய்த மிகப் பெரிய உதவி! கலங்கிப் பேசிய சிலம்பரசன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிரத்தினம் இயக்கத்தில் முதன் முறையாக கமலஹாசன் சிம்பு இணைந்து நடிக்கும் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிலம்பரசன், ஏஆர் ரகுமான், மணிரத்தினம் ஆகியோர் தனது இக்கட்டான காலகட்டத்தில் உதவியதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு பேசினார்.

தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு சென்றவர் என்றால் அது மணிரத்னம் தான். பிரபல இயக்குனர்களே அதை மறுக்காமல் ஒப்புக் கொள்வார்கள். அதே போல சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமா தந்த நடிப்பு பல்கலைக் கழகம் கமலஹாசன்.

நடிப்பு மட்டுமல்லாது இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை, வசனம், நடனம் என பல துறைகளில் அப்டேட் ஆக இருப்பவர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்தினமும் கமலஹாசனும் இணைந்து பணியாற்றிய நாயகன் படம் தற்போது வரை பலரது ஃபேவரிட் ஆக உள்ளது.

Simbu Mani Ratnam AR Rahman

ஏற்கனவே சிம்பு மணிரத்தினம் இயக்கத்தில் நடித்திருக்கும் நிலையில் முதன்முறையாக கமலஹாசனும், சிம்புவும் இணைந்து தக் லைஃப் படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்ற செய்தி வெளியான போதே பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் சிம்புவுடன், அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டீசர் ட்ரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், மணிரத்னம், கமல்ஹாசன், சிம்பு, ஏஆர் ரகுமான், அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக ஏஆர்ஆர் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிலம்பரசன், ஏஆர் ரகுமான், மணிரத்தினம் ஆகியோர் தனது இக்கட்டான காலகட்டத்தில் உதவியதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு பேசினார். நிகழ்ச்சியில் பேசிய சிலம்பரசன்," ரகுமான் சாரை பற்றி சொல்லனும்னா பேசிக்கிட்டே போகலாம்.. சிறுவயதில் இருந்தே உங்களை நான் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணி இருக்கேன். இப்ப வரைக்கும் தொல்லை பண்ணிக்கிட்டு தான் இருக்கேன் அப்படின்னு நினைக்கிறேன். ரகுமான் சார் கூட நிறைய ட்ராவல் இருக்கு.

ரொம்ப முக்கியமான ஒரு காலகட்டம் அப்படின்னா பீப் சாங் என்று ஒரு பாட்டு வந்தப்போ ரொம்ப கஷ்டமான நேரம். உங்க எல்லாத்துக்குமே தெரியும், அப்ப நம்ம ஏதாவது பண்ணனும் சொல்லி ப்ளாம் பண்னேன். ஆனால், ரஹ்மான் சார் ஊருக்கு போகணும் அப்படின்னு ஒரு நிலைமை. ஆனா அதையெல்லாம் விட்டுட்டு எனக்காக ஒரு பாட்டு பண்ணார். அந்த பாட்டு தான் தள்ளி போகாதே பாட்டு. அதை என்னைக்குமே என் வாழ்க்கையில மறக்க மாட்டேன்.

எனக்காக ரகுமான் சார் நிறைய செய்து இருக்கிறார். என்னோட அப்பா படத்துக்கு அப்புறம் வெளியில வந்து பாடுவதற்கு முதன் முதலில் வாய்ப்பு கொடுத்தது ரகுமான் சார் தான். அவர் எதை நினைச்சு கொடுத்தார் என்று தெரியாது. இப்போ தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தினு, 150 பாட்டக்கு மேல பாடி இருக்கேன். இதுக்கு காரணம் ரஹ்மான் சார் தான்.

மணிரத்னம் சார். அவர் நடிக் நம்மள கூப்பிடவே மாட்டார் செட் ஆகாதுனு நினைச்சிட்டிருந்தேன். அந்த டைமில், என் மேல் ரெட் கார்டு எல்லாம் போடுற மாதிரி ஒரு சூழல் வந்தது. ஒரு டைமில் புரொடியூசர்ஸ் எல்லாம் பயந்தாங்க. இவரை வைச்சு படம் பண்ணனுமா.. தேவையா.. ஏதாவது பிரச்னை வந்திடப்போகுதுன்னு. அந்த டைம் கையில் படம் இல்லை. டைரக்டர்ஸ் யாருமே என்கிட்ட வரல. அப்போது ஒரு போன் கால் வருது, மெட்ராஸ் டாக்கீஸிலிருந்து மணிசார் உங்களை மீட் பண்ணனும்னு சொல்றார்னு. எனக்கு உண்மையிலேயே மணி சார் தான் கூப்பிடுறாங்களா, இல்லை காமெடி பண்றாங்களான்னு இருந்தது.

போனதும் மணிசார்கிட்ட நீங்க தான் கூப்பிட்டீங்களான்னு கேட்டேன். நான் தான் கூப்பிட்டேன்னு சொன்னார். எனக்கு என்னவென்றால், யாருமே என்னை வைச்சு படம் பண்ண பயப்படும்போது, தைரியமாக, இந்தப் பையனை நம்பி, இந்தப் படத்தை எடுக்கலாம்ன்னு நம்பிக்கை வைச்சு கூப்பிட்டிங்க இல்லையா சார், அதை என்றைக்குமே மறக்கமாட்டேன் மணி சார்" என்றார் சிம்பு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+