நீங்க யாருனே எனக்கு தெரியாது.. சிம்புவை அசிங்கப்படுத்திய கோலி! எஸ்டிஆர் எடுத்த சபதம்..ஷாக்கான திரிஷா
சென்னை: நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரோமோசன் நிகழ்ச்சிகளில் படக்குழு பங்கேற்று வருகிறது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சிம்பு, விராட் கோலி தன்னை யார் என்றே தெரியாது என நேருக்கு நேர் சொன்ன சம்பவத்தை குறித்து பகிர்ந்து இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்ணம். தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் கால் பதித்தவர். ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் பணியாற்றியவர். அவரது இயக்கத்தில் வெளியான நாயகன் இன்றுவரை கல்ட் கிளாசிக் திரைப்படமாக இருக்கிறது.
இந்த நிலையில் அந்த ஜோடி பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் உடன் சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இதை அடுத்து படத்துக்கான பிரமோஷன் பணிகளில் பட குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குறிப்பாக கமல்ஹாசன், சிம்பு, திரிஷா ஆகியோர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று படத்தை புரோமோட் செய்து வருகின்றனர். கேரளா, ஆந்திரா, மும்பை என பல மாநிலங்களுக்கும் நகரங்களுக்கும் பயணம் செய்துள்ளது இந்த குழு. அந்த வகையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் நடிகர் சிம்பு, அபிராமி, திரிஷா ஆகியோர் கலந்து கொண்டு படம் குறித்த சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்த தனது அனுபவங்களை சிம்பு பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர்," ஆரம்ப காலகட்டத்தில் விராட் கோலி விளையாடிய போது அவர்தான் இந்தியாவின் அடுத்த சச்சின் டெண்டுல்கர் என கூறினேன். ஆனால் அப்போது என்னை பலரும் கிண்டல் கேலி செய்தனர். ஆனால் இப்போது அவர் அந்த உயரத்தை அடைந்து விட்டார். ஒரு முறை விராட் கோலியை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நானாகவே அவரிடம் சென்று கை கொடுத்தேன்.
நீங்கள் யார் என்று விராட் கோலி என்னிடம் கேட்டார். நான் சிம்பு நடிகர் என்று சொன்னேன். அப்போது சாரி எனக்கு தெரியாது என சொல்லிவிட்டு புறப்பட்டு சென்று விட்டார். அப்போது எனக்கு சங்கடமாக இருந்தாலும் இது உனக்கு தேவையா என எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். ஆனாலும் நான் யார் என்று ஒருநாள் உங்களுக்கு தெரிய வரும் என நினைத்தேன்.
இந்த நிலையில் சமீபத்தில் ஆர்சிபி ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டது. அதில் நீ சிங்கம் தான் பாடல் பற்றி விராட் கோலி பேசியிருந்தார். அதுவே எனக்கு மிகப் பெரிய வெற்றி தான் ஆனால். இப்போதும் நான் தான் சிம்பு என அவருக்கு தெரியுமா என தெரியவில்லை. ஆனால் எனது பாடலை பற்றி கோலிக்கு தெரிந்திருப்பது வரை ஓகே தான்" என கூறியுள்ளார் சிம்பு. சிம்பு கூறிய தகவலை கேட்டதும் ஆங்கரும் ஏன் அருகில் இருந்த திரிஷாவும் கூட சற்று அதிர்ச்சியாகித் தான் போயினர். இருந்த போதும் தான் அவமானப்பட்டதை கூட சிரித்த முகத்துடன் சிம்பு பகிர்ந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications