ஸ்டாலின் "அங்கிள்".. அப்பா டிஆருக்கு செஞ்ச உதவியை மறக்க மாட்டேன்.. உடைந்து பேசிய சிம்பு.. நெகிழ்ச்சி
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கும் நடிகர் சிம்பு நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video
இயக்குனரும், நடிகருமான டி ராஜேந்தருக்கு சமீபத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதில் அவருக்கு வயிற்றில் லேசான ரத்த கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி ராஜேந்தர் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டது.
அதன்பின் அமெரிக்காவில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட டி ராஜேந்தர் அங்கு இரண்டு வாரம் சிகிச்சை பெற்றார். இந்த சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த டி ராஜேந்தர் நேற்று சென்னைக்கு திரும்பினார்.

சிகிச்சை
சிகிச்சை முடிந்து சென்னை வந்த டி ராஜேந்தர், விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது, என் மீது அன்பும், மரியாதையும் வைத்த இந்த மண்ணுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த எல்லோருக்கும் நன்றி. உங்கள் பிரார்த்தனையின் பலன்தான் நான் சிகிச்சை முடிந்து நன்றாக இங்கே வந்து இருக்கிறேன்.

அமெரிக்கா
நான் அமெரிக்கா செல்ல உதவியாக இருந்த முதல்வர்.. அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி. அவரும், அவர்களின் குடும்பமும் என் மீது காட்டிய அன்பிற்கும், உதவிக்கும் நன்றி. எனக்கு தொடக்கத்தில் இருந்து அவர்கள் உறுதுணையாக இருந்தார்கள். அதற்கான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மாற்றுகட்சிகளில் இருந்து எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கும் நன்றி, என்று நேற்று டி. ராஜேந்தர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

கிருத்திகா உதயநிதி ஸ்டாலின்
அதேபோல் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் வெளியாகி உள்ள பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ் அறிமுக விழாவில் பேசிய நடிகர் சிம்பு, இந்த மேடையில் நான் முதலில் ஒரு நன்றி சொல்ல விரும்புகிறேன். அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது எல்லோருக்கும் தெரியும். அந்த நேரத்தில் எனக்கு ரொம்ப பக்கத்தில் இருந்தது முதல்வர் ஸ்டாலின் "அங்கிள்"..உதயநிதி "அண்ணா" இருவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆர்ஜே பாலாஜி என்னிடம் ஒரு முறை தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் எப்போது உதவி கேட்டாலும் செய்கிறார் என்று ஆர்ஜே பாலாஜி தெரிவித்தார்.

சிம்பு
எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால்.. யாருக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும்.. உடனே அவரை ரீச் செய்ய முடிகிறது. அவரை ஒரு விதத்தில் தொடர்பு கொள்ள முடிகிறது. அதோடு உதவி செய்த பின்பும் நிலைமை எப்படி இருக்கிறது என்று உதயநிதி அடிக்கடி கேட்கிறார். அவரின் இந்த குணத்திற்கு நன்றி, என்று நடிகர் சிம்பு மேடையில் குறிப்பிட்டு இருந்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications