சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின்.. அறிவாயலத்தில் குவியும் விருப்பமனுக்கள்!
சென்னை: சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி போட்டியிட சிம்லா முத்துச்சோழன் விருப்பமனுவை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதற்கு முன்னர் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் உள்ளாட்சி பணிகள் நடைபெறாமல் இருந்தது. இது தொடர்பாக திமுக வழக்கு தொடுத்தது.

இந்த நிலையில் நீதிமன்றம் தலையிட்டவுடன் இந்த ஆண்டுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் பதில் அளித்தது. இதனால் உள்ளாட்சி தேர்தல் பணிகளை அதிமுகவும், திமுகவும் தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக இரு கட்சிகளும் விருப்ப மனுக்களை பெறும் நிகழ்வை தொடங்கி வைத்துள்ளன. இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என கோரி திமுக நிர்வாகிகள் விருப்பமனுக்களை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து உதயநிதியிடம் கேட்டதற்கு அப்பா ஸ்டாலின் போட்டியிடுமாறு கூறினால் நான் போட்டியிட தயார் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உதயநிதி போட்டியிட வேண்டும் என சிம்லா முத்துச்சோழனும் விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அவர் மாதவரத்திலுள்ள சென்னை வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் விருப்ப மனுவை வழங்கினார். விக்கிரவாண்டி எம்எல்ஏ தொகுதியில் உதயநிதி போட்டியிட வேண்டும் என கள்ளக்குறிச்சி எம்பி கவுதம சிகாமணி விருப்பமனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications