பாஜக தலைவர் மாற்றம் கன்பார்ம்.. உள்ளே வருகிறார் இளம் தலைவர்.. பாஜக எடுக்கும் துணிச்சலான முடிவு?
சென்னை; பாஜக தலைவர் மாற்றம் விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர் ஒருவர் பாஜக தலைவராக வரப்போவதாக தகவல்கள் வருகின்றன.
முதல்முறை மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா சுகாதாரத்துறை அமைச்சராக தேர்வாகி உள்ளார். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் எனப்படும் இந்த துறையின் அமைச்சராக கடந்த முறை மன்சுவிக் மாண்டவியா இருந்த நிலையில் நட்டா அந்த துறையை பெற்றுள்ளார்.

இந்த நிலையில்தான் பாஜகவின் தேசிய தலைவராக இருக்கும் ஜே பி நட்டா மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நட்டாவின் மாற்றம் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது
தலைவர் மாற்றம்: இத்தனை நாட்கள் வேறும் தேசிய தலைவராக இருந்த அவர் அமைச்சராகி உள்ளார். அவர் பாஜக சட்டப்படி இரண்டு பொறுப்புகளில் இருக்க முடியாது என்பதால் பாஜக தேசிய தலைவர் பதவியில் நீடிக்க முடியாது.
அதோடு அவரின் பதவிக்காலமும் முடிகிறது. இது போக பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. சிவராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய தலைவர்.
சிவராஜ் சிங் சவுகான் இந்த லோக்சபா தேர்தலில் ஓரங்கட்டப்பட்டார். மோடி, நட்டா, அமித் ஷா மூலம் பிரச்சாரத்திற்கு கூட கொண்டு வரப்படாமல் ஓரம்கட்டப்பட்டார். முதல்வர் பதவியும் பறிக்கப்பட்டு வீட்டில் அமர வைக்கப்பட்டார். இந்த நிலையில்தான் ஆர்எஸ்எஸ் அழுத்தம் காரணமாக தற்போது சிவராஜ் சிங் சவுகான் ஆக்டிவ் அரசியலுக்குள் மீண்டும் நுழைந்து உள்ளார். ஆனால் அவரும் தற்போது அமைச்சராகி உள்ளார்.
யார் அடுத்த தலைவர்?: அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. பாஜக கட்சி விதிப்படி, கட்சித் தலைவரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
2023 ஜனவரியில் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி மேலும் ஓராண்டுக்கு பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் அவர் அமைச்சர் ஆவதால் வேறு ஒருவர் பாஜக தலைவராக உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஆர்எஸ்எஸ் சார்பாக ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவரும் அமைச்சர் ஆகிவிட்டார். இதையடுத்து பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே பெயர் தலைவருக்கான லிஸ்ட்ல பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இளைஞர் ஒருவர்: இது போக அனுராக் தாக்கூர் பாஜக தேசிய தலைவர் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய அமைச்சர்கள் குழுவில் இருந்து அனுராக் தாக்கூர் விலக்கப்பட்டிருப்பது, கட்சி அமைப்புக் கட்டமைப்பில் அவருக்கு இடமளிக்கப்படுவதற்காகத்தான்.. அவர் தலைவர் ஆக சான்ஸ் உள்ளது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறை தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் விளையாட்டு இலாகாக்கள் அமைச்சராக இருந்தவருக்கு இந்த முறை பதவி கொடுக்கப்படாத நிலையில் அவர் கட்சி தலைவர் ஆவதாக செய்திகள் வருகின்றன.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications