1 கார்டு..3 பலன்! இனி தனி தனி டிக்கெட் வேண்டாமே! இன்று முதல் சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்ட் திட்டம்!
சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மெட்ரோ, மின்சார ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் தனித்தனியாக பயணச்சீட்டு எடுப்பதை தவிர்க்கும் பொருட்டு சிங்காரச் சென்னை ஸ்மார்ட் கார்டு மூலம் பயணிக்கும் வசதி இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் நெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை அடுத்து சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்க மெட்ரோ ரயில், மின்சார ரயில் மற்றும் அரசு பேருந்து சேவையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மெட்ரோ சேவையை பொறுத்த வரை இரண்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோவில் இருந்து விம்கோ நகர், திருவொற்றியூர், எல்ஐசி, ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை சின்னமலை, கிண்டி சென்னை விமான நிலையம் வரை இயக்கப்படுகிறது.
சென்னை போக்குவரத்து:
பச்சை வழித் தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல் பரங்கிமலை வரை இயக்கப்படுகிறது. சென்னை மின்சார ரயில் சேவையை பொறுத்த வரை தினமும் லட்சக்கணக்கானோர் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றார். சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையும், சென்ட்ரல் ஆவடி மின்சார ரயில் சேவையும் இயக்கப்பட்டு வருகிறது.
மின்சார ரயில்:
தினமும் வேலைக்கு செல்வோர், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பல்லாவரம் கடற்கரை, செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி இடையேயும் மின்சார ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்ததாக சென்னை மாநகர் போக்குவரத்து வசதியையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நாளொன்றுக்கு 2500 பேருந்துகளில் சராசரியாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர்.
ஒரே கார்ட் மூலம் பயணம்:
தற்போது சென்னை மெட்ரோவில் ஸ்மார்ட் கார்டு மூலம் பயணிக்கலாம். குறிப்பிட்ட தொகையை செலுத்தி ஸ்மார்ட் கார்டு பெற்றுக்கொண்டால் பயணிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் அந்த கார்டை ஸ்கேன் செய்து பயணிக்கலாம். மின்சார ரயிலுக்கு மாதாந்திர பாஸ் மற்றும் தினமும் டிக்கெட் எடுக்கும் வசதி இருக்கிறது. இந்த நிலையில் மின்சார ரயில், மெட்ரோ ரயில், அரசு பேருந்து ஆகியவற்றிற்கு தனித்தனியாக மக்கள் டிக்கெட் எடுத்து பயணிக்கும் நிலையில் ஒரே பயண சீட்டு மூலம் பயணிக்கும் வசதியை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது.
சிங்காரச் சென்னை ஒன் சிட்டி ஒன் கார்டு:
அதன்படி 'சிங்காரச் சென்னை ஒன் சிட்டி ஒன் கார்டு' மூலம் மெட்ரோ மின்சார ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் பயணிக்க முடியும். மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில்களில் இந்த கார் டை ஸ்கேன் செய்து பயணிப்பது பயணிக்கலாம். அதேபோல அரசு பேருந்துகளில் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும். இதன் மூலம் மூன்று போக்குவரத்துகளில் மக்கள் ஒரே கார்டை பயன்படுத்தி பயணிக்கலாம். குறிப்பிட்ட தொகையைக் கொண்டு கார்டை ரீசார்ஜ் செய்து அதன் மூலம் மூன்று போக்குவரத்து சேவைகளையும் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இன்று தொடக்கம்:
இதன் மூலம் டிக்கெட் எடுக்க கவுண்டர்களில் காத்திருக்கும் கால விரயத்தை மக்கள் தவிர்க்கலாம். தற்போது இதற்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று அந்த திட்டம் தொடங்கப்படுகிறது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பல்லவன் பணிமலையில் இந்த திட்டத்தை துவக்கி வைக்கிறார். முதற்கட்டமாக சென்னை மெட்ரோ ரயில்களில் மட்டுமே இருந்து வந்த சிங்கார சென்னை பயண அட்டை மூலம் இனி அரசு பேருந்துகளிலும் பயணிக்கலாம். மேலும் மின்சார ரயில்கள். விரைவு ரயில் உள்ளிட்ட மற்ற போக்குவரத்து துறைகளிலும் பயன்படுத்தும் வகையில் விரிவாக்கம் செய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications