Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அற்பத்தனம்.. உலகக்கோப்பை பைனலில் புதிய சர்ச்சை! பாரபட்சத்தை போட்டுடைத்த பாடகர் டிஎம் கிருஷ்ணா

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற அகமாதாபாத் மைதானத்தில் இருந்த ஐசிசியின் விற்பனையகத்தில் ஆஸ்திரேலியாவின் தொப்பி கூட கிடைக்கவில்லை என்று பிரபல பாடகர் டிஎம் கிருஷ்ணா தெரிவித்து உள்ளார்.

நடந்து முடிந்த ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்று உள்ள நிலையில், போட்டியை கடந்து இந்த தொடர் நடைபெற்ற விதம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக லீக் போட்டிகளில் வெளிநாட்டு அணிகள் விளையாடும்போது மைதானத்தில் போதிய கூட்டம் இல்லாதது, பாகிஸ்தான் வீரரை பார்த்து குஜராத் ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கத்தியது, வங்கதேச ரசிகரை சுற்றி வளைத்து இந்திய ரசிகர்கள் கலாய்த்த வீடியோ என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

 Singer TM Krishna has said Not even Australias cap was available in World Cup final

அதேபோல் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ரசிகர்கள் ஒரு சார்பாக இருந்ததாக கூறியது, ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்திய ரசிகர்களை அமைதியாக்க வேண்டும் என தெரிவித்தது போன்ற விசயங்கள் சர்ச்சைக்கு உள்ளாகின. தொடக்கத்தில் இருந்தே வெளிநாட்டு ரசிகர்கள் டிக்கெட் பெறுவதில் சிரமம் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தான் கண்ட ஒரு விசயத்தை குறிப்பிட்டு இருக்கிறார் பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணா.

இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "நான் எல்லா கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கும் செல்வேன். போட்டியை காண வந்த ரசிகர்களின் நடத்தை குறித்து அதிகளவில் எழுதப்பட்டுவிட்டன. எனவே நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன். நான் கண்ட வித்தியாசமான அனுபவத்தை பகிர்கிறேன். போட்டி தொடங்குவதற்கு முன்பாக நான் இந்திய அணியின் தொப்பியை வாங்க ஐசிசியின் அதிகாரப்பூர்வ விற்பனையகத்துக்கு சென்றேன்.

நான் அங்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மஞ்சள் நிற தொப்பியையும் கேட்டேன். அப்போது அந்த தொப்பி ஸ்டாக் இல்லை என்று கூறினார்கள். போட்டியின்போது நான் சில முறை அது கிடைக்குமா என்று பார்த்தேன். ஆனால் அங்கு இல்லை. ஒரு ஆஸ்திரேலிய ரசிகரிடம் வேறொரு ஸ்டாலுக்கு சென்று பார்க்க சொல்லி உள்ளார்கள். அதற்கு அவர், "இந்த இடத்தில் இருக்குமா என்று அவர்கள் சொன்னார்கள்." என்றார்.

 Singer TM Krishna has said Not even Australias cap was available in World Cup final

அப்படியே போட்டியின் முடிவுக்கு வருவோம். திடீரென ஐசிசி விற்பனையகத்தில் ஏராளமான ஆஸ்திரேலிய அணியின் டி சர்டுகளும், தொப்பிகளும் குவிந்தன. சில மணி நேரத்தில் இவ்வளவு ஸ்டாக்குகள் எப்படி அங்கு குவிந்தன என்று எனக்கு தெரியவில்லை. இது மைதானத்தில் நீல நிறம் அணிந்தவர்கள் மட்டுமே அமர்ந்து இருக்க வேண்டும் என முடிவு செய்ததைபோல் தெரிகிறது. இதெல்லாம் அற்பத்தனமாக தெரிகிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.

வலதுசாரிகளின் கடும் எதிர்ப்பை சம்பாதித்து வருபவர் டி.எம்.கிருஷ்ணா ஆகும். 2018ம் ஆண்டு நவம்பர் மாதம், இந்திய விமான நிலைய ஆணையம், இளைஞர்களுக்கான கலாசார அமைப்புடன் இணைந்து கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் இவர் கிறிஸ்தவ ஆதரவாளர் என்று வலதுசாரிகள் கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தனர். திடீரென அந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+