SIR நெருக்கடி.. பல லட்சம் பேரின் வாக்குரிமை பறிபோகும்.. BLOக்கள் ஸ்ட்ரைக்.. அதிர வைக்கும் காரணம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர். பணிகளை புறக்கணிக்க வருவாய்த்துறை சங்கம் முடிவு செய்துள்ளது. ஊழியர்கள் எடுத்த இந்த முடிவிற்கு பின் பல முக்கியமான காரணங்கள் உள்ளன.
அதீதமான - பணி நெருக்கடிகளை களைந்திட வலியுறுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் கேரளா, மேற்கு வங்கத்தில் இந்த SIR பணிகள் காரணமாக ஊழியர்கள் தற்கொலை செய்த நிலையில் தமிழ்நாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் நடந்த ஒரு பி.எல்.ஓ. (பூத் லெவல் ஆபீசர்) தற்கொலை, மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, அதிகாரிகளைப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியுள்ளது.
1. தகவல்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு மிகவும் இறுக்கமானதாகவும், அடைய முடியாததாகவும் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 1 மாதத்தில் எல்லா பணிகளையும் முடிக்க வேண்டும்.. ஒரு BLO அதிகாரி 1200 பேரை பார்க்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அது முடியாத காரியம்.

2. வாக்காளர் தரவுகளை கள அளவில் சரிபார்ப்பதுடன், டிஜிட்டல் முறையில் பதிவேற்றும் வேலையையும் பி.எல்.ஓ-க்கள் கையாள வேண்டியிருப்பதால், பணிச்சுமை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. பல அதிகாரிகள் மோசமான இணைய இணைப்பு மற்றும் காலாவதியான மொபைல் சாதனங்கள் போன்ற தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்வதாகப் புகார் தெரிவிக்கின்றனர். இது சரிபார்ப்பு செயல்முறையை மேலும் தாமதப்படுத்துகிறது.
4. கூடுதலாக, மோசமான வானிலை மற்றும் கடினமான களச் சூழல்கள் சரிபார்ப்புப் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதை மேலும் சவாலாக்குகின்றன. பல இடங்களில் திடீரென மழை பெய்கிறது. முக்கியமாக தென் மாவட்டங்களில் மழை பெய்கிறது. இதனால் களத்திற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
5. வீட்டில் வாக்காளர் இல்லையென்றால் அவரின் வீட்டிற்கு 3 முறை செல்ல வேண்டும். இதனால் அதிகாரிகள் அதிக முறை ஒரே நபரின் வீட்டிற்கு செல்ல வேண்டி இருக்கும்.
6. காலதாமதங்களுக்காக பி.எல்.ஓ-க்கள் மீது அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், எச்சரிக்கைகள் மற்றும் விளக்கம் கேட்டு நோட்டீஸ்கள் அனுப்பப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
7. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பி.எல்.ஓ-க்கள்.. வாக்காளர்களின் EPIC எண்களை எடுத்து நிரப்பி கொடுக்க வேண்டி உள்ளது. அதை பின்னர் வீடியோ கால் எடுத்து காட்ட வேண்டி உள்ளது. அடிக்கடி வீடியோ மீட்டிங்குகளில் கலந்து கொள்ள வேண்டி உள்ளது. இது பெரிய பிரஷர் ஆகி உள்ளது.
8. பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தாலும், பணிச்சுமையைக் குறைக்க கூடுதல் ஊழியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. தற்போதைய காலக்கெடு நடைமுறைக்கு ஏற்றது இல்லை எனக் கூறி, ஊழியர்கள் சங்கங்கள் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரியுள்ளன. இதே நிலை நீடித்தால் பணிகளை முடிக்க முடியாது பல லட்சம் பேர் வாக்குகளை இழக்க நேரிடும் என்று ஊழியர்கள் கூறுகின்றனர்.
9. தங்களின் மன அழுத்தத்திற்கும், புகார்களுக்கும் உயர் அதிகாரிகளிடமிருந்து ஆதரவோ, அங்கீகாரமோ இல்லை என அதிகாரிகள் கருதுகின்றனர். பல பி.எல்.ஓ-க்கள் கடுமையான மன அழுத்தத்தையும், சோர்வையும் எதிர்கொள்வதாகக் கூறுகின்றனர். ஓய்வு நேரங்களில் கூட காலக்கெடுவைப் பற்றிய கவலையில் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
10. முக்கியமாக ஊழியர்கள் பலர்.. பல மொழிகளை பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பல வடஇந்தியர்களை சந்திக்க வேண்டி இருப்பதால் அவர்களிடம் SIR பற்றி விளக்கி விண்ணப்பங்களை வழங்கி பணிகளை முடிப்பது கடும் சிரமமாக உள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications