SIR படிவம்.. சின்ன மிஸ்டேக் பண்ணாலும் போச்சு.. ஜெராக்ஸ் எல்லாம் எடுக்க முடியாது.. ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான சிறப்புத் தீவிர திருத்தப் பணியை (SIR) தொடங்கியுள்ளது. இந்த பணிக்கான விண்ணப்பப் படிவங்கள், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான தகவல்களை இங்கே கொடுத்துள்ளோம்.

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களை சரிபார்க்கும் சிறப்பு தீவிர மறுஆய்வு (Special Intensive Revision - SIR) நடவடிக்கையை நேற்று முதல் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் மேற்கொண்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.

voting vote

இந்த நடவடிக்கையின் கீழ், பூத் நிலை அலுவலர்கள் (BLOs) வீடு வீடாகச் சென்று, தனித்துவமான கணக்கெடுப்பு படிவங்களைப் (EFs) பயன்படுத்தி தகவல்களைச் சரிபார்ப்பார்கள்.

2002-2004 காலகட்டத்தில் நடத்தப்பட்ட SIR பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இடம்பெற்றிருந்தால், அவர் கூடுதல் ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. ஆனால், அதற்குப் பிறகு சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் தங்கள் குடியுரிமை மற்றும் வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை வழங்க வேண்டும். இதனால் இளம் தலைமுறையினர் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.

சிறப்புத் தீவிர திருத்தப் பணி (SIR)

தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கும் இந்த படிவங்கள் கொண்டு செல்லப்படும். பொதுமக்கள் இந்த படிவங்களை தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

நீங்கள் வேறு இடத்திற்குச் சென்றுவிட்டால், உங்கள் குடும்பத்திற்கான படிவங்களைப் பெற்று, பாதுகாப்பாக வைத்திருக்கும்படி தற்போதைய வீட்டில் வசிப்பவர்களிடம் தெரிவிக்கலாம். அல்லது, அந்தப் பகுதியின் வாக்குச்சாவடி நிலை அலுவலரை (BLO) தொடர்புகொண்டு, முகவரி மாற்றம் குறித்துத் தெரிவித்து, படிவங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

வாக்குச்சாவடி நிலை அலுவலரின் (BLO) பெயர் மற்றும் கைபேசி எண் படிவத்தின் மேல் பகுதியில் அச்சிடப்பட்டிருக்கும். தேவையான விவரங்களுக்கு இந்த எண்ணைப் பயன்படுத்தலாம்.

இரண்டு விண்ணப்பப் படிவங்கள்

ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும். இந்த படிவங்களை நகல் எடுக்க அனுமதி இல்லை. இரண்டு படிவங்களையும் அடித்தல், திருத்துதல் அல்லது மேலெழுதுதல் இல்லாமல் தெளிவாக நிரப்ப வேண்டும்.

படிவத்துடன் வெள்ளை நிறப் பின்னணியுடன் கூடிய சமீபத்திய வண்ணப் புகைப்படத்தை இணைக்க வேண்டும். 2004-ம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளராகப் பதிவு செய்தவர்கள், 2004-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் பெற்றோரின் விவரங்களை கட்டாயம் வழங்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட இரண்டு படிவங்களையும் புகைப்பட நகல் எடுத்து அல்லது தெளிவாகப் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வது முக்கியம். உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையென்றால், மேல்முறையீட்டுக்கு இந்தப் பிரதிகள் அவசியமாக இருக்கும்.

இது மிகவும் அவசியமான ஒன்று

இரண்டு படிவங்களையும் BLO-விடம் திருப்பிக் கொடுக்கும்போது, ஒரு படிவத்தில் BLO-வின் முத்திரையையும், கையொப்பத்தையும் பெற்று, அதை ஒப்புகைச் சீட்டாகப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இது மிகவும் அவசியமான ஒன்று.

முகவரி மாறியவர்கள், தங்கள் BLO-விடமிருந்து படிவம் 8-ஐப் பெற்று, பூர்த்தி செய்து, அதன் நகலை வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், இரண்டு படிவங்களையும் தற்போதைய முகவரிக்கான BLO-விடம் சமர்ப்பித்து ஒப்புகைச் சீட்டைப் பெற வேண்டும். பழைய முகவரிக்கான BLO-விடம் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்

புதிய வாக்காளர்களைச் சேர்க்க, BLO-விடமிருந்து படிவம் 6-ஐப் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

படிவங்களை நிரப்புவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், உங்கள் BLO-வையோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வாக்குச்சாவடி நிலை முகவர் (BLA 2)-ஐயோ தொடர்பு கொள்ளலாம்.

BLA 2 முகவர்கள் ஒரு நாளைக்கு ஐம்பது படிவங்கள் வரை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் இவர்களிடம் இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+