Trichy, Salem: திருச்சி, சேலம் மாவட்டங்களில் தலா 3 லட்சத்துக்கும் அதிகமானோர் நீக்கம்! SIR ஷாக்!
சென்னை: தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் (SIR) ஒரு பகுதியாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் 3.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.கடந்த நவம்பர் 4-ம் தேதி வீடு வீடாக கணக்கீட்டுப்படிவம் விநியோகிக்கும் பணி தொடங்கியது. கணக்கீட்டுப்படிவம் விநியோகித்தல், பூர்த்தி செய்து பெறுதல் மற்றும் பதிவு செய்யும் பணிகள் ஆகியவை டிசம்பர் 4 ஆம் தேதி முடிவடைய இருந்தது.

இந்த கால அவகாசத்தை நீட்டிக்க அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, கணக்கீட்டு படிவம் பெறுவதற்கான அவகாசம் டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. டிச.11-ம் தேதி மாலை இந்திய தேர்தல் ஆணையம், கணக்கீட்டுப் படிவம் விநியோகம், திரும்பப் பெறுதல், பதிவு செய்தல் பணிகளுக்கு மேலும் 3 நாட்கள் கூடுதல் அவகாசம் அதாவது, டிச.14-ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது.
அதன் அடிப்படையில், வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19-ம் தேதி (இன்று) வெளியாகி உள்ளது. இன்று முதல், ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம். மேலும், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். அதன்பின், அவற்றின் மீது பரிசீலனைகள் நடைபெறும்.
தமிழகத்தின் SIR பணிகளின் ஒருபகுதியாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் 3.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் இருந்த 23.68 லட்சம் வாக்காளர்களில் 3.31 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு 23,68,967 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது, 20,37,180 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அதாவது, 14.01% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் இருந்த 30.30 லட்சம் வாக்காளர்களில் 3.62 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் 30,30,537 வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகு 26,68,108 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.












Click it and Unblock the Notifications