வரைவு வாக்காளர் பட்டியல்.. உங்கள் பெயரை செக் செய்வது எப்படி? புதிய வாக்காளர்களை இணைக்க முடியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் SIR பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையம் சார்பாக வெளியிடப்படவுள்ளது. இந்த பட்டியலில் தங்களின் பெயர் இருக்கிறதா, அப்படி வாக்காளர் பட்டியலில் இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும், புதிய வாக்காளர்கள் எப்படி இணைய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணிகள் நடைபெற்றது. நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய இந்த பணிகள், டிசம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற்றது. வாக்குச்சாவடி நிலை அலுவலகர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று SIR படிவத்தை கொடுத்து, அதனை பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெற்றனர்.

இதையடுத்து பதிவேற்றம் செய்தனர். இவர்களுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் உதவி செய்தனர். மொத்தமாக 6.41 கோடி படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை இன்று மதியம் 2 மணிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட உள்ளார்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இருக்கிறதா என்பதை பொதுமக்கள் தேர்தல் ஆணையம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, மாநகராட்சிகள், மாவட்ட ஆட்சியரக இணையதளங்களில் வாக்காளர் அடையாள எண்ணை பதிவிட்டு தெரிந்து கொள்ள முடியும். ஒருவேளை தங்களின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இல்லையென்றால், தேர்தல் ஆணையத்திடம் ஆட்சேபணை தெரிவிக்கலாம்.
அதேபோல் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக வாக்காளர் பட்டியலில் தங்களை இணைக்க படிவம் 6ஐ பூர்த்தி செய்ய கொடுக்க வேண்டும். இதனை இணையதளம் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம். அதேபோல் தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமும் 50 படிவம் 6 இருக்கும். அவர்களிடம் இருந்து படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம்.
இதனை டிசம்பர் 19 தொடங்கி ஜனவரி 18 வரை கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றவர்கள் முகவரி மாற்றம் செய்ய மற்றும் தொகுதி மாறுவதற்கு படிவம் 8ஐ சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்கள் பிப்ரவரி 17 வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
-
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்!












Click it and Unblock the Notifications