உங்க ஏரியா BLO அதிகாரியை பார்க்க முடியலையா? SIR ஃபார்மை எப்படி அளிப்பது? எளிதான வழி இதுதான்!
சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளை (SIR) ஆன்லைனில் மேற்கொள்வதற்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் enumeration படிவங்களை பூத் லெவல் அலுவலர்களிடம் (BLO) சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை BLO அதிகாரிகளை நீங்கள் சந்திக்க முடியவில்லை என்றால் உங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
SIR படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்வதற்கான செயல்முறை, தேர்தல் ஆணையத்தால் முழுமையாக நிர்வகிக்கப்படுகிறது. வாக்காளர்கள் எந்த படிவத்தையும் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை. ECI/ தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி (CEO) இணையதளம் அல்லது ECINET செயலி ஆகியவற்றில் உள்ள ரத்யேக இணைப்பைக் கிளிக் செய்து விவரங்களை நேரடியாக நிரப்பலாம். போர்ட்டலின் "சேவைகள்" பிரிவுக்குச் சென்று, "Fill Enumeration Form" விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த செயல்முறையைத் தொடங்கலாம்.

SIR - ஆன்லைனில் எப்படி செய்வது?
enumeration படிவங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க, EPIC (வாக்காளர் அடையாள அட்டை) எண்ணையும் மொபைல் எண்ணையும் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. EPIC என்பது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் 10 இலக்க தனித்துவமான அடையாள எண்.
enumeration படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பது எப்படி?
voters.eci.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும். "Fill Enumeration Form" என்பதைக் கிளிக் செய்யவும். மொபைல்/EPIC எண்ணை உள்ளிடவும். உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து EPIC எண்ணை உள்ளிடவும். உங்கள் தேர்தல் தரவு காண்பிக்கப்படும், அதைச் சரிபார்க்கவும்.
படிவங்களை நிரப்புவதற்கு முன், EPIC உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும். இணைக்கப்படாவிட்டால், படிவம்-8 மூலம் உடனடியாக இணைக்கலாம் ("Correction of Entries in Existing Electoral Roll" என்பதைக் கிளிக் செய்து, பின்னர் படிவம்-8 இல் "Mobile Number" விருப்பத்தை மட்டும் தேர்ந்தெடுக்கவும்). EPIC மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டதும், விண்ணப்பதாரர் மீண்டும் உள்நுழைய வேண்டும்.
கடைசி SIR தகவல்கள் உட்பட enumeration படிவத்தை நிரப்பவும். ஆதார் அடிப்படையிலான e-sign மூலம் சமர்ப்பிக்கவும். e-sign மற்றும் enumeration படிவங்களைச் சமர்ப்பிக்க EPIC மற்றும் ஆதார் தரவுகளின்படி தற்போதைய பெயர் பொருத்தப்பட வேண்டும்.
உங்கள் enumeration படிவம் பதிவேற்றப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்ப்பது எப்படி?
உங்கள் பூத் லெவல் அலுவலரிடம் (BLO) படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு அல்லது ஆன்லைனில் பூர்த்தி செய்த பிறகு, அது தேர்தல் ஆணைய போர்ட்டலில் பதிவேற்றப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம். அதற்கு, voters.eci.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தில், 'Fill Enumeration Form' என்பதைக் கிளிக் செய்யவும். இது உள்நுழைவு அல்லது பதிவுப் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். 'Sign Up' என்பதைக் கிளிக் செய்து, உங்கள் மொபைல் எண், விருப்பமான மின்னஞ்சல் ஐடி மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு பதிவை முடிக்கவும்.
'Login' என்பதைக் கிளிக் செய்து, உங்கள் மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு, பின்னர் 'Request OTP' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உள்நுழைய OTP ஐ உள்ளிடவும். உள்நுழைந்ததும், உங்கள் பெயர் மேலே தோன்றும். மீண்டும் 'Fill Enumeration Form' என்பதைக் கிளிக் செய்யவும். கொடுக்கப்பட்ட பெட்டியில் உங்கள் EPIC (வாக்காளர் ஐடி) எண்ணை உள்ளிடவும். 'Search' என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் படிவத்தின் நிலை உடனடியாகத் தோன்றும். உங்கள் படிவம் பதிவேற்றப்பட்டிருந்தால், "Your form has already been submitted with mobile number XXXXX..." என்ற செய்தி தோன்றும். உங்கள் படிவம் பதிவேற்றப்படாவிட்டால், மேலே உள்ள செய்தி தோன்றாது. மாறாக, ஒரு புதிய படிவப் பக்கம் திறக்கப்படலாம். காண்பிக்கப்படும் மொபைல் எண் தவறாக இருந்தால் அல்லது நீங்கள் சமர்ப்பிக்காத போதிலும் நிலை 'submitted' என்று இருந்தால், உடனடியாக உங்கள் உள்ளூர் BLO ஐத் தொடர்பு கொள்ளவும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications