SIR.. உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டால்.. என்ன செய்யலாம்? உருவாக்கப்பட்ட புதிய வசதி!
சென்னை: வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லாதவர்கள் புதிய வாக்காளராக பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய வாக்காளர்கள், இடம் மாறியோர் மற்றும் சிறப்பு ஆய்வு திருத்தத்தில் (SIR) விடுபட்டோர் இனி பதிவு செய்யலாம்.
பிப்ரவரியில் வெளியிடப்படவுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற புதிய வாக்காளர்கள், இடம் மாறியோர் மற்றும் சிறப்பு ஆய்வு திருத்தத்தில் (SIR) விடுபட்டோர் இப்போது பதிவு செய்யலாம். பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) 3,700 சாவடி நிலை அலுவலர்கள் வழியாக படிவம்-6 ஐ விநியோகிக்கிறது. மேலும், தேர்தல் ஆணைய இணையதளத்திலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன.

புதிய வாக்காளர்கள் பதிவு செய்யலாம்
பெரும்பாலான SIR படிவங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டும், தாமதங்களும் தொழில்நுட்பக் கோளாறுகளும் நீடிப்பதை அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனர். எனவே, ஒரு முழுமையான சீரான ஆன்லைன் செயல்பாட்டிற்கு கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் 77 லட்சம் வாக்காளர் கொத்தாக நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மட்டும் 10.40 லட்சம் பேர் வரை நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இறந்தவர்கள், இடமாறியவர்கள், தொடர்பு கொள்ள முடியாதவர்கள், இரட்டை வாக்கு கொண்டவர்கள் என்று 77.52 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. 25.42 லட்சம் பேர் இறந்த காரணத்தால் பெயர்கள் நீக்கப்பட உள்ளன. 5.18 கோடி பேர் இதுவரை SIR படிவங்களை பதிவேற்றி உள்ளனர்.
77 லட்சம் பேர் வரை படிவங்களை வழங்கவில்லை. இடமாறியவர்கள் 39.27 லட்சம் பேர், 8.97 லட்சம் பேர் தொடர்பு கொள்ள முயடியாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற காரணங்களுக்காக 3.32 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளே பல தொகுதிகளில் மாறும் வாய்ப்புகள் உள்ளன.
SIR பணிகள் தமிழ்நாடு
இந்திய தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி காலக்கெடுவை ஒரு வாரம் நீட்டித்தது. கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி இந்த பணிகள் தொடங்கியது. தமிழ்நாட்டில் கடந்த 2002-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு வருகின்றன. எஸ்.ஐ.ஆர் பணிகளில் தமிழகத்தில் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அதாவது பிஎல்.ஓக்கள் ஈடுபட்டனர். கடந்த வாரம் முடிய வேண்டிய பணிகள் 1 வாரம் நீட்டிக்கப்பட்டு நேற்று நிறைவு பெற்றது.
கனமழை போன்ற காரணங்களால் கால நீட்டிப்பு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் இப்பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த் துறை ஊழியர்கள் மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரியுள்ளனர். எனினும், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், திட்டமிட்டபடி பணிகளை முடிக்க ஆணையம் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்களின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வரும் 19 ஆம் தேதி வெளியிடப்படும். அதன்பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
எத்தனை பேருக்கு படிவங்கள்
தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, 6.41 கோடி வாக்காளர்களில் 6.30 கோடி பேருக்கு (98.34%) கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 11 லட்சம் வாக்காளர்களை இன்னும் சென்றடையவில்லை. மொத்த வாக்காளர்களில் 6.29 கோடி படிவங்கள் (99%) டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
இப்பணிகளில், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 68,470 பூத் லெவல் அதிகாரிகள் (BLOs), அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட 2.46 லட்சம் பூத் லெவல் முகவர்கள் (BLAs) மற்றும் 30,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உங்கள் enumeration படிவம் பதிவேற்றப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்ப்பது எப்படி?
உங்கள் பூத் லெவல் அலுவலரிடம் (BLO) படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு அல்லது ஆன்லைனில் பூர்த்தி செய்த பிறகு, அது தேர்தல் ஆணைய போர்ட்டலில் பதிவேற்றப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம். அதற்கு, voters.eci.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தில், 'Fill Enumeration Form' என்பதைக் கிளிக் செய்யவும். இது உள்நுழைவு அல்லது பதிவுப் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். 'Sign Up' என்பதைக் கிளிக் செய்து, உங்கள் மொபைல் எண், விருப்பமான மின்னஞ்சல் ஐடி மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு பதிவை முடிக்கவும்.
'Login' என்பதைக் கிளிக் செய்து, உங்கள் மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு, பின்னர் 'Request OTP' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உள்நுழைய OTP ஐ உள்ளிடவும். உள்நுழைந்ததும், உங்கள் பெயர் மேலே தோன்றும். மீண்டும் 'Fill Enumeration Form' என்பதைக் கிளிக் செய்யவும். கொடுக்கப்பட்ட பெட்டியில் உங்கள் EPIC (வாக்காளர் ஐடி) எண்ணை உள்ளிடவும். 'Search' என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் படிவத்தின் நிலை உடனடியாகத் தோன்றும். உங்கள் படிவம் பதிவேற்றப்பட்டிருந்தால், "Your form has already been submitted with mobile number XXXXX..." என்ற செய்தி தோன்றும். உங்கள் படிவம் பதிவேற்றப்படாவிட்டால், மேலே உள்ள செய்தி தோன்றாது. மாறாக, ஒரு புதிய படிவப் பக்கம் திறக்கப்படலாம். காண்பிக்கப்படும் மொபைல் எண் தவறாக இருந்தால் அல்லது நீங்கள் சமர்ப்பிக்காத போதிலும் நிலை 'submitted' என்று இருந்தால், உடனடியாக உங்கள் உள்ளூர் BLO ஐத் தொடர்பு கொள்ளவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications